தீபாவளிக்கு விரிசல் இல்லாத குலாப் ஜாமூன் செய்யணுமா? இந்த 3 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க போதும்..

Posted By:

Diwali Special Gulab Jamun Recipe In Tamil: பொதுவாக ஒரு பண்டிகை வந்தாலே வீட்டில் உடனே குலாப் ஜாமூன் செய்வோம். அந்த அளவில் குலாப் ஜாமூன் அனைவரது மிகவும் விருப்பமான ஸ்வீட்டாகும். ஆனால் இன்னும் நிறைய பேருக்கு குலாப் ஜாமூனை சரியான பக்குவத்தில் செய்யத் தெரியவில்லை என்றே கூறலாம்.

எப்போது செய்தாலும், அந்த குலாப் ஜாமூனில் விரிசல் ஏற்பட்டு, கூழ் போன்றாகிவிடும். இதனாலேயே பலரும் கடைகளில் குலாப் ஜாமூனை வாங்குகிறார்கள். ஆனால் உஙகளுக்கு கடைகளில் வாங்கி சாப்பிட மனமில்லையா? அப்படியானால் அடுத்தமுறை குலாப் ஜாமூனை வீட்டில் செய்யும் போது, கீழே கொடுத்துள்ள 3 டிப்ஸ்களை மனதில் கொண்டு செய்யுங்கள். இதனால் விரிசல் இல்லாத சூப்பரான குலாப் ஜாமூனை செய்யலாம்.

Diwali Special Recipes How To Make a Soft Gulab Jamun

உங்களுக்கு விரிசல் இல்லாத குலாப் ஜாமூனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குலாப் ஜாமூன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* குலாப் ஜாமூன் மிக்ஸ் - 1 பாக்கெட்
* தண்ணீர் - 1/4 கப்
* நெய் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

சர்க்கரை பாகுவிற்கு...

* சர்க்கரை - 1/2 கிலோ
* தண்ணீர் - 3/4 லிட்டர்
* ஏலக்காய் - 3

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் குலாப் ஜாமூன் மிக்ஸை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, விரல்களால் மட்டும் மாவை லேசாக அழுத்தம் கொடுத்து பிசைய வேண்டும்.
* பின்பு அதில் 1/4 டீஸ்பூன் நெய் ஊற்றி மாவை விரல்களால் மட்டும் மிதமான அழுத்தம் கொடுத்து பிசைந்து, 10 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். இப்படி நெய் சேர்க்கும் போது மாவு விரைவில் ஒன்று சேரும் மற்றும் மாவும் காய்ந்து போகாமல் இருக்கும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 1/2 கிலோ சர்க்கரை சேர்த்து, அத்துடன் 3/4 லிட்டர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து சர்க்கரையை கரைய விட வேண்டும்.
* மறுபுறம் பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு கையில் சிறிது நெய்யை தடவி, கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து, மூன்று விரல்களால், மாவை லேசாக அழுத்தம் கொடுத்து 10 முறை உருட்ட வேண்டும். இப்படி ஒவ்வொரு உருண்டையையும் உருட்டும் போது, குலாப் ஜாமூனில் விரிசல் ஏதும் வராது.
* பின் கொதித்துக் கொண்டிருக்கும் சர்க்கரை பாகுவுடன் ஏலக்காயை தட்டிப் போட்டு, சர்க்கரை பாகு சற்று பிசுபிசுப்பாகத் தொடங்கியதும், அடுப்பை அணைத்து இறக்கிவிட வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் வைத்து, ஒவ்வொரு உருண்டைகளையும் சேர்த்து, லேசாக சுழற்றிவிட்டு பொரிக்கும் போது, குலாப் ஜாமூன் அனைத்தும் ஒரே பொன்னிறத்தில் வேகும். அனைத்து ஜாமூனும் வெந்ததும், அதை எடுத்து, சூடாக இருக்கும் சர்க்கரை பாகுவில் சேர்த்து 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். குலாப் ஜாமூன் மென்மையாக இருக்க, லேசாக மூடி வைக்க வேண்டும். இப்போது சுவையான மற்றும் மென்மையான குலாப் ஜாமூன் தயார்.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion