Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
தீபாவளி பலகாரம் செய்ய நேரமில்லையா? 30 நிமிஷம் இருந்தா போதும் இந்த சூப்பரான பலகாரங்களை செஞ்சுரலாம்...!
Easy Diwali Recipes in 30 Minutes in Tamil: தீபாவளி வந்தாலே உற்சாகமும், மகிழ்ச்சியும் இருப்பது போலவே குடும்பத் தலைவிகளுக்கு பதற்றமும், வேலைப்பளுவும் அதிகரித்து விடும். தீபாவளிக்கு அனைத்து வீடுகளிலும் அவசியம் பலகாரங்கள் செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு தீபாவளி நெருங்கி வந்த பிறகுதான் விடுமுறையே கிடைக்கும். இந்த நேரத்தில் ஷாப்பிங் செல்வதா? பலகாரம் செய்வதா? என்பதே பெரிய தலைவலியாக இருக்கும்.
இதுபோன்ற சூழலில் எளிதில் செய்யக்கூடிய பலகாரங்களை செய்ய தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். அந்த வகையில் அரை மணி நேரத்திற்குள் செய்து விடக்கூடிய சில எளிய மற்றும் சுவையான பலகாரங்களின் ரெசிபிக்கள் இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. அவற்றை செய்து உங்கள் தீபாவளியை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் கொண்டாடுங்கள்.

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
கடலை மாவு - ½ கப்
சீரகம் -1 டீ ஸ்பூன்
பெருங்காயம் - ¼ டீ ஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- அரிசி மாவு மற்றும் கடலை மாவை சலித்து எடுத்து கொள்ளவும்.
- அதனுடன் சீரகம், பெருங்காயம், வெண்ணெய், மற்றும் தேவையான அளவு உப்பு
சேர்த்து நெய் மாவுடன் நன்றாக கலக்கும் படி பிசைந்து கொள்ளவும்.
- பின் அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து
கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய விட்டு, முறுக்கு
குழாயில் நட்சத்திர வடிவ அச்சை சேர்த்து எண்ணெய் தடவி கொள்ளவும்.
- அதில் பிசைந்து வைத்த மாவை சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் பிழிந்து
விட்டு பொரித்து எடுத்தால் சுவையான பட்டர் முறுக்கு தயார்.
பாதுஷா
தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
சமையல் சோடா - ¼ டீ ஸ்பூன்
உப்பு - ¼ டீ ஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - ¾ கப்
ஏலக்காய் தூள் - ¼ டீ ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீ ஸ்பூன்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் மைதா, சமையல் சோடா, உப்பு, நெய் மற்றும் தயிர்
சேர்த்து அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக பிசையவும்.
- பின் அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான பதம் வரும்
வரை மென்மையாக பிசைந்து 15 நிமிடங்கள் ஊற விடவும்.
- கொள்ளவும்.
- அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் கால் கப்
தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
- பின் அதில் ஏலக்காய் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து
இறக்கி ஆற விடவும்.
- ஊற வைத்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் ஓட்டை போல்
அழுத்தி எடுத்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்த
உருண்டைகளை சேர்க்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு புறமும் வெந்து சிவந்து வரும்
வரை வேக விடவும்.
- பின் அதை காய்ச்சி வைத்த சர்க்கரை பாகில் சேர்த்து 5 முதல் 10
நிமிடங்கள் விட்டு எடுத்து வைத்தால் சுவையான பாதுஷா ரெடி!
தட்டை
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - 4 டீ ஸ்பூன்
பொட்டுக்கடலை - ½ கப்
பூண்டு - 6 அல்லது 8 பல்
மிளகு - ½ டீ ஸ்பூன்
சீரகம் - ½ டீ ஸ்பூன்
கருவேப்பில்லை - 1 கொத்து
அரிசி மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
கருப்பு எள் - ½ டீ ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ¼ ஸ்பூன்
நெய் அல்லது வெண்ணெய் - 1 டீ ஸ்பூன்
செய்முறை:
- கடலை பருப்பை தண்ணீரில் அலசி விட்டு இரண்டு மணி நேரத்திற்கு ஊற
விடவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, பூண்டு, மிளகு, சீரகம் மற்றும்
கருவேப்பில்லை சேர்த்து பொடியாக அரைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி
கொள்ளவும்.
- அதனுடன் அரிசி மாவு, உப்பு, மிளகாய் தூள், கருப்பு எள்,
பெருங்காயத்தூள்,
நெய் அல்லது வெண்ணெய் மற்றும் ஊற வைத்த கடலை பருப்பு சேர்த்து கலந்து
கொள்ளவும்.
- எண்ணெயை சூடு செய்து அதையும் மாவுடன் சேர்த்து பிசைந்து
கொள்ளவும்.
- பின் அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து
கொள்ளவும்.
- பின் வாழை இலை அல்லது கெட்டியான பிளாஸ்டிக் கவரில் மாவை வைத்து
மெலிதாக தேய்த்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த
தட்டைகளை சேர்க்கவும்.
- இரண்டு புறமும் நன்றாக வேக விட்டு எடுத்தால் சுவையான தட்டை
ரெடி!



Click it and Unblock the Notifications