Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
தீபாவளிக்கு திருநெல்வேலி ஸ்பெஷல் முந்திரி கொத்து செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்...
Diwali Special Thirunelveli Special Munthiri Kothu Recipe In Tamil: வருகிற தீபாவளி பண்டிகைக்கு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான பலகாரத்தை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் நமது பாரம்பரிய ஸ்வீட் ஒன்றை செய்யுங்கள். அது தான் திருநெல்வேலி ஸ்பெஷல் முந்திரி கொத்து. இது பச்சை பயறு, தேங்காய், எள்ளு விதைகளைக் கொண்டு செய்யக்கூடியது. இந்த முந்திரி கொத்து ஸ்வீட்டை ஒரு மாதம் வரை வைத்து சாப்பிடலாம்.
உங்களுக்கு திருநெல்வேலி ஸ்பெஷல் முந்திரி கொத்து ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திருநெல்வேலி ஸ்பெஷல் முந்திரி கொத்து ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1 கப்
* எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்
* ஏலக்காய் - 2
பாகுவிற்கு...
* உடைத்த வெல்லம்/கருப்பட்டி - 3/4 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
மேல் மாவிற்கு...
* பச்சரிசி மாவு - 1/2 கப்
* மைதா - 1/4 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சை பயறை
சேர்த்து, பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதே வாணலியில் எள்ளு விதைகளை சேர்த்து வறுத்து, அதையும்
பச்சை பயறுடன் சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மீண்டும் அந்த வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய
தேங்காயை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி, அதை ஒரு தட்டில் போட்டு
குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வறுத்த பச்சை பயறு மற்றும் எள்ளு விதைகளை
சேர்த்து ஓரளவு கொரகொரவென்று அரைத்து ஒரு அகலமான தட்டில் போட்டுக்
கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் வறுத்த தேங்காய் மற்றும் ஏலக்காயை சேர்த்து
கொரகொரவென்று அரைத்து, அதை பச்சை பயறு பொடியுடன் சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் பொடித்த 3/4 கப் வெல்லத்தை சேர்த்து,
அத்துடன் 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும்,
அந்த வெல்ல நீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து வடிகட்டிய அந்த வெல்ல நீரை மீண்டும் அடுப்பில் வைத்து, 1
சிட்டிகை உப்பு சேர்த்து கிளறி, ஒரு கம்பி பதத்திற்கு வரும் வரை
கொதிக்க வைத்து இறக்கி, சூடாக இருக்கும் போதே அரைத்த பொடியுடன்
சேர்த்து கரண்டியால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் சூடாக இருக்கும் போதே சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு
தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் உருட்டிய அந்த உருண்டைகளை 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 3 மணிநேரம் கழித்து மேல் மாவை தயாரிக்க வேண்டும். அதற்கு ஒரு
பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா, மஞ்சள் தூள் சேர்த்து, நீரை ஊற்றி
பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி லேசாக சூடானதும், இரண்டு உருண்டைகளை எடுத்து,
மாவில் போட்டு பிரட்டி, எண்ணெயில் போட வேண்டும். இதேப் போன்று இரண்டு
இரண்டு உருண்டைகளாக எடுத்து மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு மிதமான
தீயில் வைத்து 2-3 நிமிடம் ப்ரை செய்து எடுத்துக் கொண்டால், சுவையான
திருநெல்வேலி ஸ்பெஷல் முந்திரி கொத்து தயார்.



Click it and Unblock the Notifications