Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
தீபாவளிக்கு வெறும் 10 நிமிஷத்துல பலகாரம் செய்யணுமா? அப்ப மொறுமொறுன்னு இந்த ரிப்பன் பக்கோடாவ செய்யுங்க..
Diwali Special Ribbon Pakoda Recipe In Tamil: தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால், நிறைய பேர் தங்கள் வீடுகளில் என்னென்ன பலகாரம் செய்யலாம் என்று யோசித்து திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். நீங்களும் அப்படி யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?
சிம்பிளாகவும், அதே சமயம் சுவையாகவும் நிறைய கார வகைகளை செய்ய விரும்புகிறீர்களா? அதற்காக பட்டியலை தயாரித்து, செய்முறையை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் அதில் ரிப்பன் பக்கோடாவை சேர்த்துக் கொள்ளுங்கள். ரிப்பன் பக்கோடா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, மொறுமொறுவென்று சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு ரிப்பன் பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரிப்பன் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி மாவு - 1 கப்
* கடலை மாவு - 1/4 கப்
* பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* எள்ளு - 1 டீஸ்பூன்
* சூடான எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் அரிசி மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் 1/4 கப் கடலை மாவை சலித்து சேர்க்க வேண்டும்.
* அதன் பின் 1/4 கப் பொட்டுக்கடலை மாவை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் உப்பு, மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத் தூள்
சேர்த்து, அதன் பின் எள்ளு விதைகளை கைகளால் கசக்கி சேர்க்க
வேண்டும்.
* பிறகு சூடான எண்ணெயை 1 டேபிள் ஸ்பூன் ஊற்றி, கரண்டியால் நன்கு கிளறி
விட வேண்டும்.
* பின் கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கைகளால் நன்கு பிசைந்து
கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, மிகவும் இறுக்கமாக
இல்லாமல், ஓரளவு இறுக்கமாக, அதே சமயம் மென்மையாக பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின்பு முறுக்கு உழக்கை எடுத்து, அதில் ரிப்பன் பக்கோடா அச்சை
வைத்து, பின் பிசைந்த மாவை வைத்து, எண்ணெயில் நேரடியாக
பிழிந்துவிட்டு, பொரித்து எடுத்தால், சுவையான ரிப்பன் பக்கோடா
தயார்.



Click it and Unblock the Notifications
