Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
தீபாவளிக்கு அதிரசம் செய்யும் போது இந்த 3 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க.. உதிரவே உதிராது...
Diwali Special Adhirasam Recipe In Tamil: தீபாவளி பண்டிகை வரப்போகிறது. உங்கள் வீட்டில் தீபாவளி பலகாரம் செய்யும் வழக்கம் உள்ளதா? அப்படியானால் இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிரசத்தை செய்யுங்கள். அதிரசம் செய்வது கடினம் என்று நீங்கள் நினைத்தால், அது தான் தவறு.
அதிரசம் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பிடிக்குமானால், அதை வீட்டிலேயே ஒருசில டிப்ஸ்களை மனதில் கொண்டு செய்தால், எளிதில் செய்யலாம். முக்கியமாக வீட்டில் அதிரசம் செய்யும் போது, கணக்கில்லாமல் சாப்பிடலாம்.

உங்களுக்கு அதிரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அதிசரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கிலோ அல்லது 4 கப்
* அடர் நிற உடைத்த வெல்லம் - 3/4 கிலோ அல்லது 4 கப்
* தண்ணீர் - 2 கப்
* ஏலக்காய் மற்றும் சுக்கு பொடி - 3/4 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கருப்பு அல்லது வெள்ளை எள்ளு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* நெய் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவி, பின் நீரை ஊற்றி, 3
மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 3 மணிநேரம் கழித்து அரிசியில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, மீண்டும்
சுத்தமான நீரில் 2 முறை கழுவி, நீரை முழுமையாக வடித்துவிட
வேண்டும்.
* அதன் பின் ஒரு காட்டன் துணியை தரையில் விரித்து, அதில் இந்த அரிசியை
தூவி, அரை மணிநேரம் காய வைக்க வேண்டும்.
* அரை மணிநேரம் கழித்து, அரிசியை தொட்டால், அந்த அரிசி சற்று ஈரமாக
கையில் ஒட்டிக் கொள்ளுமாறு இருக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் சிறிது அரிசியை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு அகலமான பாத்திரத்தில் சல்லடையை வைத்து அதில் அரைத்த
மாவை சேர்த்து சலித்துக் கொள்ள வேண்டும்.
* மீதமுள்ள குருணையை மீண்டும் ஜாரில் சேர்த்து, அத்துடன் மீண்டும்
சிறிது அரிசியை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து, அதை சலிக்க
வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அரைத்த அனைத்து மாவையும் ஒரு சம்படத்தில் அல்லது குறுகலான
பாத்திரத்தில் போட்டு, மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து உடனே ஒரு பாத்திரத்தில் 4 கப் உடைத்த வெல்லத்தை சேர்த்து,
அத்துடன் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தைக் கரைத்துக்
கொள்ள வேண்டும்.
* வெல்லம் கரைந்ததும், ஒரு அகலமான வாணலியில் வெல்ல கரைசலை வடிகட்டி
ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து, 7-8 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* வெல்லம் நன்கு கொதித்து, சற்று கெட்டியாகத் தொடங்கியதும், தீயைக்
குறைத்து, பாகு பதத்தை ஒரு தட்டு நீரில் சிறிது ஊற்றி சோதிக்க
வேண்டும். அப்போது வெல்லப்பாகு கரையாமல் கையில் எடுக்கும் படி
வந்தால், சரியான பதத்திற்கு வெல்லப்பாகு வந்துவிட்டது என்று
அர்த்தம்.
* பின் அடுப்பை அணைத்துவிட்டு, அதில் ஏலக்காய் மற்றும் சுக்கு பொடி,
உப்பு மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கிளறி
விட வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவை சேர்த்து, அத்துடன்
வெல்லப் பாகுவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* மாவானது மிகவும் இறுக்கமாகவும் இல்லாமல், மிகவும் நீராகவும்
இல்லாமல், நடுத்தரமாக இருக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நெய்யை ஊற்றி மேலே தடவி, ஒரு துணியால் மூடி, பின்
ஒரு தட்டு கொண்டு மூடி, குறைந்தது 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 24 மணிநேரம் கழித்து, மூடியைத் திறந்து, மாவை எடுத்து உருட்டும்
போது மாவு, நன்கு உருட்ட வந்தால், சரியான பதத்தில் உள்ளது என்று
அர்த்தம்.
* பின்பு ஒரு வாழை இலை அல்லது பாலிதீன் கவரில் எண்ணெய் தடவி, சிறிது
மாவை எடுத்து உருட்டி சற்று தடிமனாக தட்டையாக தட்டி, வேண்டுமானால்,
நடுவே ஒரு ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள அதிசரத்தை ஒவ்வொன்றாக
சேர்த்து, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், அதிரசம்
தயார்.
குறிப்பு:
1. அதிரசத்திற்கு மாவை அரைக்கும் போது, அரிசி சற்று ஈரமாக இருக்கும் போதே அரைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின் அரைத்தால், அதிசரம் வறண்டு போயிருக்கும்.
2. அதிரசத்திற்கு பாகு தயாரிக்கும் போது, அந்த பாகு கெட்டியாகத் தொடங்கியதும், தட்டில் நீரை வைத்து, 1 நிமிடத்திற்கு ஒருமுறை பதம் பார்க்க வேண்டும். அப்படி பதம் பார்க்கும் போது, வெல்லப்பாகுவை நீரில் ஊற்றும் போது, பாகுவை கையில் எடுக்கும் போது, அது எளிதில் வருவதோடு, உருட்டினால் உருட்டவும் வர வேண்டும், அதே சமயம் சற்று இலகவும் வேண்டும். இப்படி இருந்தால், சரியான பதத்தில் பாகு உள்ளது என்று அர்த்தம்.
3. அதிரசத்திற்கு எண்ணெயை சூடேற்றும் போது, எந்த தீயில் வைத்து எண்ணெயை சூடேற்றுகிறீர்களோ, அதே அளவு தீயில் தான் அதிரசம் முழுவதையும் சுட்டெடுக்க வேண்டும். இடையில் தீயை குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது. முடிந்தவரை மிதமான தீயில் வைத்து அதிரசத்தை சுடுவது நல்லது.
கடைசியாக, அதே சமயம் முக்கியமாக அதிரசத்தை செய்ய தொடங்கினால், அடுத்தடுத்து வரிசையாக செய்ய வேண்டும். இடைவெளி விட்டு செய்யக்கூடாது.



Click it and Unblock the Notifications