Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
வெறும் 3 பொருளைக் கொண்டே தீபாவளிக்கு சுவையான வேர்க்கடலை கட்லி செய்யலாம் தெரியுமா?
தீபாவளி பண்டிகைக்கு உங்கள் வீட்டில் ஒரு ஈஸியான மற்றும் சுவையான ஸ்வீட் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் 3 பொருட்களைக் கொண்டே ஒரு அட்டகாசமான ஸ்வீட் செய்யலாம். அது தான் வேர்க்கடலை கட்லி.
தீபாவளி பண்டிகைக்கு உங்கள் வீட்டில் ஒரு ஈஸியான மற்றும் சுவையான ஸ்வீட் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் 3 பொருட்களைக் கொண்டே ஒரு அட்டகாசமான ஸ்வீட் செய்யலாம். அது தான் வேர்க்கடலை கட்லி. நாம் இதுவரை காஜூ கட்லியை கடைகளில் வாங்கி சாப்பிட்டிருப்போம். இந்த காஜூ கட்லி முந்திரி கொண்டு செய்வது. ஆனால் வேர்க்கடலைக் கொண்டு செய்வது தான் வேர்க்கடலை கட்லி. இதற்கு 3 பொருள் இருந்தாலே போதும்.

உங்களுக்கு வேர்க்கடலை கட்லி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை கட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வறுத்த வேர்க்கடலை - 1 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* நெய் - 3 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் வறுத்த வேர்க்கடலையில் உள்ள தோலை நீக்கிவிட வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். வேர்க்கடலையை அரைக்கும் போது மிகவும் வேகமாக அரைக்காமல், மிதமான வேகத்தில் அரைக்க வேண்டும். இல்லாவிட்டால், அது எண்ணெயை வெளியிட்டு, பேஸ்ட் போல் ஆகிவிடும்.
* பின்பு ஒரு நான்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரையை சேர்த்து, நீரை ஊற்றி, சர்க்கரையை கரைக்க வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்து, பாகு கம்பி பதத்திற்கு வரும் போது, குறைவான தீயில் வைத்து, வேர்க்கடலை பொடியை கொஞ்சம் கொஞ்சமாக தூவி நன்கு 5 நிமிடம் தொடர்ந்து கிளற வேண்டும்.
* பின் நெய்யை ஊற்றி கிளறவும். அப்படி கிளறும் போது, கலவையானது பேனில் ஒட்டாமல் திரண்டு வரும். அப்படி திரண்டு வரும் போது அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பின்பு ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது பட்டர் பேப்பரில் நெய்யை தடவி, அதில் இந்த வேர்க்கடலை கலவையை வைத்து, அதன் மேல் மற்றொரு பிளாஸ்டிக் கவர் அல்லது பட்டர் பேப்பரை வைத்து, சப்பாத்தி உருட்டும் கட்டையால் 1/4 இன்ச் தடிமன் அளவிற்கு தேய்க்க வேண்டும்.
* பிறகு மேலே உள்ள கவர் அல்லது பேப்பரை எடுத்துவிட்டு, உடனே கத்தியால் வேண்டிய வடிவங்களில் வெட்டி எடுத்துக் கொண்டால், சுவையான வேக்கடலை கட்லி தயார்.
குறிப்பு:
* வறுத்த வேர்க்கடலை இல்லாவிட்டால், பச்சை வேர்க்கடலையை வாங்கி அதை வறுத்து பயன்படுத்தலாம்.
* வேர்க்கடலை கட்லியின் சுவையை அதிகரிக்க வேண்டுமானால், வீட்டில் பால் பவுடர் இருந்தால், அதில் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications












