Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்!
தீபாவளி ஸ்பெஷல் மில்க் கேக்
இந்த வருடம் நீங்கள் இதுவரை வீட்டில் செய்திராத ஒரு சுவையான இனிப்பு செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் மில்க் கேக் செய்யுங்கள். இந்த மில்க் கேக் அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு ஸ்பெஷலாக பலகாரங்கள்/இனிப்புகள் செய்யும் வழக்கம் உங்களுக்கு உள்ளதா? இந்த வருடம் நீங்கள் இதுவரை வீட்டில் செய்திராத ஒரு சுவையான இனிப்பு செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் மில்க் கேக் செய்யுங்கள். இந்த மில்க் கேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை அசத்துவதற்கு இது ஒரு அற்புதமான இனிப்பாக இருக்கும்.

உங்களுக்கு மில்க் கேக் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மில்க் கேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முழு பால் - 1 லிட்டர்
* சர்க்கரை - 1/2 கப் அல்லது சுவைக்கேற்ப
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பால் கால்வாசியாக குறையும் வரை நன்கு சுண்ட கொதிக்க வைக்க வேண்டும். அப்படி கொதிக்கும் போது அவ்வப்போது பாத்திரத்தின் முனையில் உறைந்துள்ள பாலை கீறி, பாலில் போட வேண்டும்.
* இந்நிலையில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கிளறி விட்டு, பால் கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். மறக்காமல் அவ்வப்போது பாத்திரத்தின் முனையில் உறைந்துள்ள பாலை கீறி, பாலில் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்னர் மெதுவாக சர்க்கரை சேர்த்து தொடர்ந்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
* பால் நன்கு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் நெய் சேர்த்து தொடர்ந்து நன்கு கிளற வேண்டும். கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல் ஒரு பதத்தில் வரும் போது அடுப்பை அணைத்து விடுங்கள்.
* பின் ஒரு சிறு தட்டையான கிண்ணத்தில் நெய்யை நன்கு தடவி, அதில் இந்த கலவையைப் போட்டு சமமாக பரப்பி விட்டு, அந்த கிண்ணத்தை ஒரு அலுமினியத் தாள் கொண்டு நன்கு மூடி, பின் ஒரு துணியால் நன்கு மூடி வைக்க வேண்டும்.
* சில மணிநேரங்கள் கழித்து, கத்தியால் துண்டுகளாக்கினால், மில்க் கேக் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications