1 கப் கடலைப்பருப்பை வெச்சு.. தீபாவளிக்கு சூப்பர் லட்டு செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க..

Posted By:

Diwali Special Laddu Recipe In Tamil: தீபாவளி பண்டிகை வரப்போகிறது. அனைவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் பலவிதமான பலகாரங்களை செய்ய திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். உங்களின் பலக்கார பட்டியலில் லட்டுவும் இடம் பெற்றுள்ளதா?

இதுவரை லட்டு செய்வதாக இருந்தால், பூந்தியை எண்ணெயில் பொரித்து தான் செய்திருப்பீர்கள். ஆனால் அப்படி எண்ணெயில் பொரிக்காமலேயே அருமையாக லட்டு செய்யலாம் தெரியுமா? இப்படி ஒருமுறை லட்டு செய்ய தெரிந்து வைத்துக் கொண்டால், பின் எந்த பண்டிகை வந்தாலும் நொடியில் லட்டு செய்துவிடுவீர்கள்.

Diwali Special Laddu How To Make a Simple Laddoo Recipe

உங்களுக்கு தீபாவளி ஸ்பெஷலாக எண்ணெயில் பொரிக்காமல் லட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கடலைப் பருப்பு - 1 கப் (2 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* சர்க்கரை - 1 1/4 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் - 3
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* தண்ணீர் - 1 1/2 கப்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 15

செய்முறை:

* முதலில் கடலைப்பருப்பை நீரில் 2 முறை கழுவி, பின் நீரை ஊற்றி, 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, மிக்சர் ஜாரில் ஊற வைத்த கடலைப் பருப்பை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிப் போட்டு, மொறுமொறுவென்று பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு பெரிய மிக்சர் ஜாரில் பொரித்ததை சேர்த்து, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/4 கப் சர்க்கரை, 1 சிட்டிகை உப்பு, 3 ஏலக்காய், மஞ்சள் தூள் சேர்த்து, 1 1/2 கப் நீரை ஊற்றி, சர்க்கரை கரைந்து, ஒரு கம்பி பதத்திற்கு வந்ததும், அரைத்ததை சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கி, கை பொறுக்கும் சூட்டிற்கு வரும் வரை குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து ப்ரை செய்து, குளிர வைத்துள்ள கலவையுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* கலவையானது வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி லட்டு போன்று பிடித்து வைத்தால், சுவையான லட்டு தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, October 6, 2025, 17:59 [IST]
Desktop Bottom Promotion