Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
1 கப் கடலை மாவும், 3/4 கப் நெய்யும் இருக்கா.. அப்ப இந்த மாதிரி மைசூர் பாக் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
Diwail Special Ghee Mysore Pak Recipe: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் வீடுகளில் பலகாரங்களை செய்வோம். நீங்களும் உங்கள் வீட்டில் தீபாவளி பலகாரங்களை செய்ய தொடங்கிவிட்டீர்களா?
பொதுவாக ஸ்வீட் என்றதுமே பலரது நினைவிற்கு முதலில் வருவது மைசூர் பாக்காகவே இருக்கும். அதுவும் வாயில் வைத்ததும் கரையும்படியான மைசூர் பாக்கை சாப்பிடவே அனைவரும் விரும்புவோம்.

உங்கள் வீட்டில் உள்ளோர் மைசூர் பாக்கை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் இந்த ஆண்டு தீபாவளிக்கு பலகாரம் செய்யும் போது, மைசூர் பாக்கையும் செய்யுங்கள். மைசூர் பாக் செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது செய்வதற்கு மிகவும் குறைவான பொருட்களே போதும்.
உங்களுக்கு வாயில் வைத்ததும் கரையும்படியான மைசூர் பாக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெய் மைசூர் பாக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 1 கப்
* எண்ணெய் - 3/4 கப்
* நெய் - 3/4 கப்
* சர்க்கரை - 1 கப்
* தண்ணீர் 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி லேசாக சூடேற்றிக்
கொள்ள வேண்டும். பின் அதில் பாதியை ஒரு பௌலில் ஊற்றி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் மீதமுள்ள பாதி எண்ணெய் நெய் கலவையை கடலை மாவில் ஊற்றி
கட்டிகளின்றி நன்கு மென்மையாக கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு அகலமான வாணலியில் 1 கப் சர்க்கரை மற்றும் 1/2 கப் நீரை
ஊற்றி கலந்து, அடுப்பில் வைத்து சர்க்கரையை கரைக்க வேண்டும். சர்க்கரை
கரைந்ததும், குறைவான தீயில் வைத்து, சர்க்கரை கம்பி பதத்திற்கு வரும்
வரை சூடேற்ற வேண்டும்.
* சர்க்கரை பாகு கம்பி பதத்திற்கு வந்ததும், அதில் கரைத்து வைத்துள்ள
கடலை மாவை சேர்த்து நன்கு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* கடலை மாவானது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் எடுத்து வைத்துள்ள
எண்ணெய் நெய் கலவையை ஊற்றி மிதமான தீயில் வைத்து நன்கு சுருண்டு வரும்
வரை கிளறி விட வேண்டும்.
* கடலை மாவை வாணலியில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும் போது, அடுப்பை
அணைத்துவிட்டு, மீண்டும் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு பாத்திரத்தில் நெய்யை தடவி, அதில் இந்த கடலை மாவை
ஊற்றி பரப்பி, 1 மணிநேரம் குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் கத்தியால் அதை துண்டுகளாக்கினால், சுவையான நெய் மைசூர்
பாக் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications








