Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
தாபா ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்..
Dhaba Style Potato Kurma Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி, பூரி செய்வீர்களா? அவற்றிற்கு உருளைக்கிழங்கு சைடு டிஷ் தான் அதிகம் செய்வீர்களா? அதுவும் ஒரே மாதிரியான சுவையில் தான் உருளைக்கிழங்கு சைடு டிஷ் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை புதுமையான சுவையில் உருளைக்கிழங்கு குருமாவை செய்யுங்கள்.
அதுவும் தாபா ஸ்டைலில் உருளைக்கிழங்கு குருமா செய்யுங்கள். இப்படி செய்யும் போது, அது வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். மேலும் இப்படி உருளைக்கிழங்கு குருமா செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு தாபா ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாபா ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு..
* உருளைக்கிழங்கு - 3
* உப்பு - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* பூண்டு - 6 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* பச்சை மிளகாய் - 5
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - 10 இலைகள்
* தேங்காய் - 2 சில்லு
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 1
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் குக்கரில் உருளைக்கிழங்குகளை இரண்டு துண்டுகளாக்கி
சேர்த்து, கிழங்கு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கை வெளியே எடுத்து,
அதன் தோலை நீக்கிவிட்டு, மீடியம் அளவில் சதுரத் துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி,
புதினா ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் தேங்காய், சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும்
ஏலக்காய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 2 நிமிடம் பச்சை
வாசனை போக வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மல்லித் தூள் சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை
ஊற்றி கிளறி விட்டு, 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, உப்பு
சுவை பார்த்து, பின் மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து 4-5 நிமிடம்
நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான தாபா ஸ்டைல் உருளைக்கிழங்கு
குருமா தயார்.



Click it and Unblock the Notifications
