Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா
நீங்கள் தாபா ஸ்டைல் ரெசிபியை உங்கள் வீட்டில் செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலாவை முயற்சி செய்யுங்கள். இந்த மசாலா சப்பாத்தி, நாண், புல்கா போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
தாபா ஸ்டைல் உணவுகள் ஒரு தனித்துவமான சுவையைக் கொண்டிருக்கும். இதற்கு அதில் சேர்க்கப்படும் மசாலா தான் காரணம். நீங்கள் இந்த தாபா ஸ்டைல் ரெசிபியை உங்கள் வீட்டில் செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலாவை முயற்சி செய்யுங்கள். இந்த மசாலா சப்பாத்தி, நாண், புல்கா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதோடு இது விடுமுறை நாட்களில் செய்து சாப்பிட ஏற்றதாக இருக்கும்.

உங்களுக்கு தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தாபா மசாலாவிற்கு...
* மல்லி விதைகள் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* பட்டை - 1/2 இன்ச்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
ஊற வைப்பதற்கு...
* பன்னீர் - ஒரு கப்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* நெய்/வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு...
* நெய்/வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 2
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* உலர்ந்த வெந்தய கீரை/கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பெரிய பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள பன்னீரை ஒரு நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாபா மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து குறைவான தீயில் நன்கு வறுத்து இறக்கி, குளிர்ந்ததும் மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தாபா மசாலா பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து குறைவான தீயில் வதக்க வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, பின், அதில் தயிரை ஊற்றி நன்கு கிளறி, எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் உலர்ந்த வெந்தய கீரை, கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா தயார்.
Image Courtesy: hebbarskitchen



Click it and Unblock the Notifications
