Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மணமணக்கும்... தீபாவளி மட்டன் குழம்பு
Deepavali Mutton Kuzhambu Recipe In Tamil: தீபாவளி நாளில் பெரும்பாலானோரின் வீடுகளில் மட்டன் சமைப்பது வழக்கம். நீங்களும் உங்கள் வீட்டில் மட்டன் வாங்குவீர்களா? அந்த மட்டனைக் கொண்டு நீங்கள் சிம்பிளாக, அதே சமயம் ஈஸியாக செய்யக்கூடிய வகையில் ஒரு சைடு டிஷ் செய்ய நினைத்தால், இந்த ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்து கொடுங்கள்.
இந்த மட்டன் குழம்பு செய்வது மிகவும் சுலபம். இந்த மட்டன் குழம்பு இட்லியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு தீபாவளி மட்டன் குழம்பை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே தீபாவளி மட்டன் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 250 கிராம்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 3
* பட்டை - 1 இன்ச்
* அன்னாசிப் பூ - 1
* பிரியாணி இலை - 2
* சின்ன வெங்காயம் - 12 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின்பு சின்ன வெங்காயத்தை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி,
தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் மட்டனைக் கழுவிப் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும்
மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி சில நிமிடங்கள் நன்கு கிளறி விட
வேண்டும்.
* மட்டன் நன்கு நீர் விட்டு வெந்ததும், அதில் 2 டம்ளர் நீரை ஊற்றி
குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, கரம்
மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்கு
கிளறி, கறிவேப்பிலையை சேர்த்து பிரட்டி, பச்சை வாசனை போக கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான மட்டன் குழம்பு தயார்.
Image Courtesy: annslittlecorner



Click it and Unblock the Notifications








