Latest Updates
-
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
Dahi Bhindi Recipe : தஹி பிந்தி
உங்கள் வீட்டில் வெண்டைக்காய் உள்ளதா? அப்படியானால் வெண்டைக்காய் மற்றும் தயிர் கொண்டு ஒரு சுவையான தஹி பிந்தி ரெசிபியை செய்து கொடுங்கள்.
நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு இன்று ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் வெண்டைக்காய் உள்ளதா? அப்படியானால் வெண்டைக்காய் மற்றும் தயிர் கொண்டு ஒரு சுவையான தஹி பிந்தி ரெசிபியை செய்து கொடுங்கள். இது சப்பாத்தி, நாண், நெய் சாதம், புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு தஹி பிந்தி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தஹி பிந்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்டைக்காய் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
* தக்காளி - 2
* முந்திரி - 6-7
* தயிர் - 1/2 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கடலை மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* க்ரீம் - 1-2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கசூரி மெத்தி/உலர்ந்த வெந்தயக் கீரை - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெண்டைக்காயை போட்டு 8-10 நிமிடம் குறைவான தீயில் வைத்து நன்கு நிறம் மாறும் வரை மற்றும் மென்மையாக வேகும் வரை வதக்கி இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் தக்காளி மற்றும் முந்திரியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதே வேளையில் ஒரு பௌலில் தயிரை நன்கு அடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு நிறம் மாறும் வரை வதக்கி, அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த தக்காளி முந்திரி பேஸ்ட் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து கடலை மாவை சேர்த்து குறைவான தீயில் வைத்து 1-2 நிமிடம் நன்கு கிளற வேண்டும்.
* பின் அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு ஒரு நிமிடம் கிளறி விட்டு இறக்க வேண்டும்.
* பின்பு அதில் அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். பின் அதில் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து சற்று கெட்டியாகி மேலே எண்ணெய் மிதக்க ஆரம்பிக்கும் போது, உலர்ந்த வெந்தயக்கீரை மற்றும் க்ரீம் சேர்த்து கிளறி இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான தஹி பிந்தி தயார்.
Image Courtesy: vegrecipesofindia



Click it and Unblock the Notifications
