Latest Updates
-
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்..
ருசியான கறிவேப்பிலை சிக்கன் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க
Karuveppilai Chicken Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்யப் போகிறீர்களா? எப்போது சிக்கனை வாங்கினாலும் ஒரே மாதிரி சிக்கன் 65, சிக்கன் வறுவல், சிக்கன் கிரேவி என்று தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் கறிவேப்பிலை அதிகம் உள்ளதா? அப்படியானால் அந்த கறிவேப்பிலையை சிக்கனுடன் சேர்த்து கறிவேப்பிலை சிக்கன் செய்யுங்கள். இப்படி செய்யும் போது கறிவேப்பிலை பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இது சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட.
விடுமுறை நாளில் டக்கென்று சமையலை முடிக்க நினைத்தால், இந்த கறிவேப்பிலை சிக்கனை செய்து, ரசம் வைத்தால் போதும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இந்த கறிவேப்பிலை சிக்கனை எப்படி செய்வதென்று அஜிதா ராஜா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உங்களுக்கு கறிவேப்பிலை சிக்கனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 2
* பட்டை - 1 துண்டு
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 1 கையளவு (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பச்சை மிளகாய் - 1(கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - பாதி (பொடியாக நறுக்கியது)
* சிக்கன் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கையளவு
கறிவேப்பிலையை சேர்த்து நன்கு ப்ரை செய்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சீரகம்,
சோம்பு, மிளகு, வரமிளகாய், ஏலக்காய், கிராம்பு, பட்டை ஆகியவற்றை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த கறிவேப்பிலை மற்றும் மசாலா பொருட்களை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம்,
2 கொத்து கறிவேப்பிலை மற்றும் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, 2 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 1
நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து, அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து 2 நிமிடம் கிளறி,
தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, 15-20 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நன்கு கிளறி, திறந்து வைத்த
நீர் வற்றும் வரை கிளறி விட்டு வேக வைத்து இறக்கினால், சுவையான
கறிவேப்பிலை சிக்கன் தயார்.



Click it and Unblock the Notifications
