Latest Updates
-
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும் -
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
காரைக்குடி சிக்கன் வறுவல்
இந்த வார விடுமுறை அன்று காரைக்குடி ரெசிபிக்களை முயற்சிக்க நினைத்தால், காரைக்குடி சிக்கன் வறுவலை செய்து சுவையுங்கள். இந்த வறுவல் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
தமிழ்நாட்டில் காரைக்குடி உணவுகள் மிகவும் பிரபலமானவை மற்றும் சுவையானவையும் கூட. அதிலும் காரைக்குடி சிக்கன் ரெசிபிக்கள் அட்டகாசமாக இருக்கும். நீங்கள் இந்த வார விடுமுறை அன்று காரைக்குடி ரெசிபிக்களை முயற்சிக்க நினைத்தால், காரைக்குடி சிக்கன் வறுவலை செய்து சுவையுங்கள். இந்த வறுவல் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த ரெசிபியை வீட்டில் செய்தால், அனைவரது பாராட்டையும் பெறுவீர்கள்.

உங்களுக்கு காரைக்குடி சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரைக்குடி சிக்கன் வறுவல் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 300 கிராம்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு...
* மிளகு - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 1/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* வரமிளகாய் - 4
* மல்லி - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 5 பல்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 3
* கறிவேப்பிலை - சிறிது
மசாலாவிற்கு...
* எண்ணெய் - 5 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 3 (அரைத்துக் கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சிக்கனில் போட்டு பிரட்டி, குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து, நல்ல மணம் வரும் வரை சில நிமிடங்கள் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அந்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து மசாலாவைத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, சீரகம், சோம்பு சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
* பின் தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும். அடுத்து மல்லித் தூள் சேர்த்து குறைவான தீயில் 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 2-3 நிமிடம் நன்கு கிளறி, ஊற வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு மசாலா சிக்கனில் சேருமாறு கிளறி விட வேண்டும். இப்படி குறைந்தது 5 நிமிடம் குறைவான தீயில் சிக்கனை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1-2 கப் நீரை ஊற்றி, மிதமான தீயில் மூடி வைத்து, சுமார் 15 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* பின் கறிவேப்பிலை மற்றும் அரைத்த பச்சை மிளகாயை சேர்த்து, 1-2 நிமிடம் வதக்கி இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான காரைக்குடி சிக்கன் வறுவல் தயார்.
Image Courtesy: mareenasrecipecollections



Click it and Unblock the Notifications











