Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
1/2 கப் சேமியாவும், 1 முட்டையும் இருந்தா போதும்.. சூப்பரா ஸ்நாக்ஸை ஈவ்னிங் செய்யலாம்...
Crispy Semiya Biscuit Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? அதுவும் சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸை சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் சேமியாவும், முட்டையும் உள்ளதா?
அப்படியானால் சேமியா பிஸ்கட்டை செய்து கொடுங்கள். இந்த சேமியா பிஸ்கட் செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த பிஸ்கட்டை ஒருமுறை செய்தால் ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு சேமியா பிஸ்கட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேமியா பிஸ்கட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருததுக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வறுத்த சேமியா - 1/2 கப்
* முட்டை - 1
* சர்க்கரை - 1/4 கப்
* ஏலக்காய் - 2
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* கோதுமை மாவு - 1 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் சேமியாவை எடுத்து, அதில் முட்டையை
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் அந்த சேமியாவைப் போட்டு, அத்துடன் சர்க்கரை,
ஏலக்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் கோதுமை
மாவு, நெய், பேக்கிங் சோடா சேர்த்து, நீர் சேர்க்காமல் நன்கு
சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.
* பின் சிறு சிறு உருண்டைகளாக. வெடிப்புகளின்றி நன்கு உருட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு உருட்டி வைத்துள்ள ஒரு உருண்டையை எடுத்து, அதை தட்டையாக
தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து
மாவையும் தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ளதை போட்டு, முன்னும்
பின்னும் பொரித்து எடுத்தால், சுவையான ஸ்நாக்ஸ் தயார்.



Click it and Unblock the Notifications









