Latest Updates
-
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
வெண்டைக்காயும் வேர்க்கடலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 வேளையும் சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது.. -
சூரியன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் பலமும், செல்வாக்கும் அதிகரிக்கப் போகுதாம்
குழந்தைகளுக்கு பிடிக்கும் க்ரீமி மஸ்ரூம் டோஸ்ட்!
உங்கள் வீட்டில் காளான் இருந்தால், அந்த காளானுடன் சீஸ், பிரஷ் க்ரீம் ஆகியவற்றை சேர்த்து க்ரீமி மஸ்ரூம் மசாலாவைத் தயாரித்து, பிரட்டை டோஸ்ட் செய்து, அந்த பிரட் டோஸ்ட்டின் மீது க்ரீமி மஸ்ரூமை வைத்துக் கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து பசியோடு வரும் போது, அவர்களுக்கு வெறும் காபி, டீ, பால் மட்டும் கொடுக்காமல், அவர்கள் விரும்பி சாப்பிடும் பிரட் கொண்டு ஒரு சுவையான ரெசிபி செய்து கொடுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் காளான் இருந்தால், அந்த காளானுடன் சீஸ், பிரஷ் க்ரீம் ஆகியவற்றை சேர்த்து க்ரீமி மஸ்ரூம் மசாலாவைத் தயாரித்து, பிரட்டை டோஸ்ட் செய்து, அந்த பிரட் டோஸ்ட்டின் மீது க்ரீமி மஸ்ரூமை வைத்துக் கொடுங்கள். இது நிச்சயம் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். அதோடு இது பெரியோர்களும் சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த ரெசிபியை காலை வேளையில் கூட செய்து சாப்பிடலாம். இது ஒரு நல்ல காலை உணவாகவும் இருக்கும்.

உங்களுக்கு க்ரீமி மஸ்ரூம் டோஸ்ட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே க்ரீமி மஸ்ரூம் டோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 20
* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1
* பூண்டு - 4 பல்
* ஆரிகனோ - 1 டீஸ்பூன்
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பிரஷ் க்ரீம் - 1/4 கப்
* சீஸ் - 1/4 கப் (துருவியது)
* பார்ஸ்லி/கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பிரட் துண்டுகள் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வெங்காயத்தை நன்கு பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் காளானை நன்கு நீரில் கழுவி சுத்தம் செய்து, பேப்பர் டவலில் வைத்து உலர்த்த வேண்டும். பின்பு அதை துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பூண்டு பற்களை எடுத்து அதை மிகவும் பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும். சீஸை துருவி வைத்துக் கெள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு உருக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு சிறிது நிறம் மாற வதக்க வேண்டும். பின் அதில் காளானைப் போட்டு உயர் தீயில் வைத்து 4-5 நிமிடம் நன்கு காளானில் இருந்து நீர் வற்றும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு, ஆரிகனோ, சில்லி ப்ளேக்ஸ் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். ஒருவேளை அடிபிடிப்பது போன்று இருந்தால், சிறிது நீரைத் தெளித்துக் கொள்ளுங்கள்.
* பின்பு அதில் பிரஷ் க்ரீம் மற்றும் துருவிய சீஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இறுதியாக அதில் பார்ஸ்லி/கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்க வேண்டும். இப்போது க்ரீமி காளான் தயார்.
* அடுத்து பிரட் துண்டுகளை எடுத்து, முன்னும், பின்னும் வெண்ணெய் தடவி தோசைக்கல்லில் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது பிரட் டோஸ்ட் தயார்.
* இறுதியாக பிரட் டோஸ்ட்டின் மேல் தயாரித்த க்ரீமி காளானை வைத்து பரிமாறினால், க்ரீமி மஸ்ரூம் டோஸ்ட் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
