Latest Updates
-
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் எய்ம்ஸ் டாக்டர்! -
இட்லி அரிசியும், அப்பளமும் இருந்தா இந்த கேரளா ஸ்டைல் அப்பள வடையை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும்
இட்லிக்கு தேங்காய் சட்னியை ஒருமுறை இந்த மாதிரி செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி இப்படி தான் செய்வீங்க...
Coconut Thanni Chutney Recipe: காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருப்போருக்கு சட்னி தான் பிடிக்குமா?
அதுவும் நீங்கள் வீட்டில் அடிக்கடி தேங்காய் சட்னியைத் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை தேங்காய் சட்னியை இந்த ஸ்டைலில் செய்யுங்கள். இதனால் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். மேலும் வீட்டில் இருப்போரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு தேங்காய் தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 7 பல்
* வரமிளகாய் - 6
* தேங்காய் - 1/4 மூடி (துருவியது)
* பொட்டுக்கடலை - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் வரமிளகாய் சேர்த்து லேசாக வதக்கி,
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பூண்டு, வரமிளகாயை சேர்த்து, அத்துடன்
துருவிய தேங்காய், பொட்டுக்கடலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணி சட்னி என்பதால், அதில் நீரை கொஞ்சம் அதிகமாக ஊற்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய்
சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி
நன்கு பொன்னிறமாக வதக்கி, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான
தேங்காய் தண்ணி சட்னி தயார்.
Image Courtesy: Apoorvas Nalabagam



Click it and Unblock the Notifications