Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தோசை மாவு இல்லையா? அப்ப 1 கப் ரவையும், 1/2 கப் தேங்காயும் வெச்சு இப்படி ஒருடைம் தோசை சுட்டு பாருங்க..
Coconut Rava Dosa Recipe In Tamil: காலையில் தோசை சுட வீட்டில் மாவு இல்லையா? என்ன டிபன் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? 10 நிமிடத்தில் ஒரு அற்புதமான டிபன் செய்யணுமா? வீட்டில் 1 கப் ரவையும், 1/2 கப் துருவிய தேங்காயும் இருந்தா, சூப்பரான தோசை சுடலாம்.
இந்த தோசைக்கான மாவு செய்ய 10 நிமிடம் போதும். முக்கியமாக இந்த தோசைக்கு வீட்டில் உள்ள சில பொருட்களே போதுமானது. இந்த மாதிரி மாவை தயார் செய்து தோசை சுடும் போது, தோசை இன்னும் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் ரவா தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் ரவா தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* சின்ன வெங்காயம் - 5
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப்
* கேரட் - 3 (துருவியது)
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1 கப் ரவையை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், சீரகம், சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, தேவைப்பட்டால்
சிறிது நீரை ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அந்த மாவை மூடி வைத்து 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் இந்த
மாவைக் கொண்டு தோசை ஊற்றி, மேலே கேரட்டை சிறிது தூவி, எண்ணெய் ஊற்றி,
முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான தேங்காய் ரவா தோசை
தயார்.



Click it and Unblock the Notifications