Latest Updates
-
தீபாவளி அன்று பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குளை போடுங்க.. -
இராவணனுக்கு தங்க நகரமான இலங்கை எப்படி கிடைத்தது? அதை இராவணனுக்கு கொடுத்தது யார் தெரியுமா? -
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்! -
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும் -
தீபாவளிக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரண களமா இருக்கப்போகுது.. -
உங்க குளிர்சாதனப் பெட்டியில் கூலிங் பிரச்சினை இருக்கா? அப்ப ஒரு பேப்பரை வைச்சு ஈஸியா இப்படி கண்டுபிடிங்க -
பாஸ்போர்ட் இல்லாமல் உலகின் எந்த நாட்டுக்கும் பயணிக்கும் அந்தஸ்து உள்ள சக்திவாய்ந்த 3 பேர் யார் தெரியுமா? -
2 கப் ஜவ்வரிசி இருந்தா.. தீபாவளிக்கு 10 நிமிஷத்துல ஸ்வீட், கார மிக்சர் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க.. -
3/4 கப் உளுந்து இருந்தா இந்த தால் மகாராணியை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
தீபாவளி பட்டாசு புகையால் கண் எரிச்சல், சரும அலர்ஜி, மூச்சுத்திணறலா? பாதுகாப்பாக இருக்க டாக்டர் கூறும் டிப்ஸ்!
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும்
Coconut Ginger Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னிகள் அரைத்து போரடித்து விட்டதா? புதுசா ஏதாவது சைடிஷ் செய்ய ஆசைப்படுறீங்களா? அப்ப ஆந்திரா ஸ்டைல் சைடிஷ்களை கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க. வழக்கமான சட்னிகளுக்கு மாற்றாக சற்று காரமான அதே சமயம் ஆரோக்கியமான சட்னியை செய்ய வேண்டுமா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் தேங்காய் இஞ்சி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி வழக்கமாக செய்யும் சட்னியை விட சற்று வித்தியாமான சுவையில் இருக்கும்.

வழக்கமான சட்னி போல அல்லாமல் இதில் இஞ்சி அதிகமாக சேர்த்து சட்னி அரைக்கப்படுவதால் இந்த சட்னி எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் எளிமையாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்து விட்டால், அதன்பிறகு அடிக்கடி செய்யத் தொடங்கி விடுவீர்கள்.
உங்களுக்கு தேங்காய் இஞ்சி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 3 ஸ்பூன் துருவிய தேங்காய்
- ¼ கப் தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி
- 3 பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் புளி விழுது
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் துருவிய வெல்லம்
- 1 ஸ்பூன் எண்ணெய்
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் உளுந்தம்பருப்பு
- 1 ஸ்பூன் கடுகு
- சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை:
- இஞ்சியைக் கழுவி, அதன் தோலை நீக்கி, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- பச்சை மிளகாய்களை நறுக்கித் தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு அடி கனமான பாத்திரத்தில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், நறுக்கி வைத்த இஞ்சி மற்றும் பச்சை மிளகாயைச் சேர்க்கவும்.
- இஞ்சி பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் அவற்றை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றவும். வதக்கிய பொருட்கள் ஆறும் வரை காத்திருக்கவும்.
- பின்னர் மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், உப்பு மற்றும் வெல்லத்தைச் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்கத் தொடங்கும்போது, உளுந்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- உளுந்து பொன்னிறமாக மாறியதும் புளி கரைசல் மற்றும் அரைத்து வைத்த இஞ்சி விழுதைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- சட்னியை ஒரு நிமிடம் வேகவிடவும், பிறகு அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
- இந்த சுவையான சட்னியை சூடான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
