Latest Updates
-
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம்
சத்தான.. பிரண்டை சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
Pirandai Chutney Recipe In Tamil: இதுவரை இட்லி, தோசைக்கு எத்தனையோ சட்னியை செய்திருப்பீர்கள். ஆனால் வாரம் ஒருமுறையாவது பிரண்டை சட்னியை செய்து சாப்பிடுங்கள். ஏனெனில் இந்த பிரண்டை சட்னி உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடியது.
குறிப்பாக மூட்டு வலி, வாத நோய் கொண்டவர்கள் இந்த சட்னியை அடிக்கடி செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு மிகவும் ருசியாகவும் இருக்கும். பிரண்டை சட்னியை ஒருமுறை சுவைத்தால், அடிக்கடி செய்து சாப்பிட தோன்றும். ஏனெனில் அந்த அளவில் சுவை பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு பிரண்டை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரண்டை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரண்டை - 2 கட்டு
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1/2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 6
* உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 6 பல்
* சின்ன வெங்காயம் - 10
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புளி - நெல்லிக்காய் அளவு
* தேங்காய் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் பிரண்டையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு கையில்
எண்ணெய் தடவிக் கொண்டு, பிரண்டையின் கூர்மையான 4 முனைகளையும்
கத்தியால் நீக்கி, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாயை சேர்த்து ப்ரை செய்து, தனியாக
ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து,
அதையும் மிளகாயுடன் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து
நன்கு வதக்கி, அதையும் தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் கூடுதலாக 1/2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி,
துண்டுகளாக்கி வைத்துள்ள பிரண்டையை சேர்த்து, அதோடு கறிவேப்பிலையும்
சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் துருவிய
தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வரமிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் வதக்கிய மற்ற வெங்காயம், பூண்டு, பிரண்டையையும்
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கிளறினால், சுவையான பிரண்டை சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
