Latest Updates
-
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...
இட்லி, தோசைக்கு இந்த சுவையான சிக்மங்களூர் சட்னி செய்யுங்க… 4 இட்லி சேர்த்து சாப்பிடுவாங்க…!
இந்த மனிதப்பிறவி என்பது நன்கு ரசித்து, சுவைத்து சாப்பிட கடவுளால் கொடுக்கப்பட்டதாகும். சாப்பிடுவது மட்டுமே நமது நோக்கம் இல்லையென்றாலும் சுவையான உணவுகளை தேடி சாப்பிடுவது பிறவிப் பலனை அடைய வைக்கும்.
சில வெளியூர் சிறப்பு உணவுகளை அங்கு சென்றுதான் சாப்பிட வேண்டிய அவசியமில்லை. சில சமயங்களில் அவற்றை நம் வீட்டிலேயும் சமைத்து சாப்பிடலாம். அப்படி ஒரு எளிய மற்றும் சுவையான உணவுதான் இந்த சிக்மங்களூர் சட்னி. வழக்கமான சட்னி வகைகளில் இருந்து கொஞ்சம் வேறுபட்ட இந்த சட்னி இட்லி, தோசை மற்றும் ஆப்பம் போன்ற உணவுகளுக்கு ஏற்றது.

இந்த சட்னி செய்து சாப்பிடும்போது எத்தனை இட்லி, தோசை சாப்பிடுகிறோம் என்று கணக்கு வைத்துக்கொண்டிருக்க முடியாது. இந்த சுவையான சட்னியை எப்படி செய்யலாம் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
பூண்டு - 10 பல்
பச்சைமிளகாய் - 4
தக்காளி - 2 (பெரியது)
எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்
புதினா - 1 கைப்பிடி அளவு
தேங்காய் - அரை மூடி
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
கடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
உளுந்து - 1 டீ ஸ்பூன்
கருவேப்பில்லை - சிறிதளவு
செய்முறை:
- பூண்டு பற்களை தோல் நீக்கி வைத்து கொள்ளவும்.
- அரைமூடி தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்துக்
கொள்ளவும்.
- ஒரு கைப்பிடி அளவிற்கு வரும் புதினா இலைகளை மட்டும் தனியே வைத்து
கொள்ளவும்.
- பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய்
சேர்க்கவும்.
- பின் கடலைப்பருப்பு மற்றும் உளுந்து சேர்த்து நிறம் மாறும் வரை
வதக்கவும்.
- அதன் பின் கொத்தமல்லி விதைகளை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை
வதக்கவும்.
- அதன் பின் சீரகம் சேர்த்து கிளறிவிடவும்.
- அதனுடன் தோல் நீக்கி வைத்திருக்கும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு
சிவக்கும் வரை வதக்கவும்.
- பின் பச்சை மிளகாய் சேர்த்து கிளறிவிடவும்.
- அதனுடன் நன்றாக பழுத்திருக்கும் சிவப்பு நிற தக்காளி இரண்டை நறுக்கி
சேர்த்து நன்றாக வதக்கவும்.பின் எள்ளு சேர்த்து நிறம் மாறும் வரை
கிளறிவிடவும்.
- அதில் ஒரு கைப்பிடி புதினா இலைகளை சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் சிறிய எலுமிச்சை அளவு புளியை சேர்த்து நன்கு கிளறவும்.
- பின் அடுப்பை அணைத்து விட்டு தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு
சேர்த்து கிளறி ஆற விடவும்.
- நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
- பின் தாளிக்க பாத்திரத்தை அடுப்பில் வைத்து காய விடவும்.
- பாத்திரம் சூடானதும் எண்ணெய் சேர்த்து காய வைக்கவும்.
- எண்ணெய் சூடானதும் சிறிதளவு கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- கடுகு வெடித்ததும் கறிவேப்பிலையை சேர்க்கவும்.
- அதனுடன் கடலைப்பருப்பு மற்றும் உளுந்து சேர்த்து மிதமான தீயில்
வதக்கி கொள்ளவும்.
- அதனுடன் பெருங்காயம் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
- பின் இதைசட்டினி உடன் சேர்த்து கிளறினால், சுவையான சிக்மங்களூர்
சட்னி ரெடி!!!



Click it and Unblock the Notifications