Latest Updates
-
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க..
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: ஒயிட் கிறிஸ்துமஸ் ஸ்லைஸ் ரெசிபி
பலரும் இந்த கிறிஸ்துமஸ் பார்ட்டியின் போது ஸ்பெஷலாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கலாம். அந்த வகையில் தமிழ் போல்ட் ஸ்கை ஒரு வித்தியாசமான அதே சமயம் சுவையான மற்றும் எளிமையான ஒரு ஸ்வீட் ரெசிபியை உங்களுக்காக கொடுத்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலரும் இந்த கிறிஸ்துமஸ் பார்ட்டியின் போது ஸ்பெஷலாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கலாம். அந்த வகையில் தமிழ் போல்ட் ஸ்கை ஒரு வித்தியாசமான அதே சமயம் சுவையான மற்றும் எளிமையான ஒரு ஸ்வீட் ரெசிபியை உங்களுக்காக கொடுத்துள்ளது. அது தான் ஒயிட் கிறிஸ்துமஸ் ஸ்லைஸ் ரெசிபி. இதற்கு அடுப்பில் எல்லாம் வேலை அதிகமாக இருக்காது. ஆனால் இதற்கான பொருட்கள் கிடைப்பது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் அந்த பொருட்கள் ஆன்லைனில் கிடைக்கும்.

இப்போது ஒயிட் கிறிஸ்துமஸ் ஸ்லைஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உலர்ந்த துருவிய தேங்காய் (Dessicated Coconut) - 1 கப்
* பால் பவுடர் - 1/4 கப்
* அரிசி கிறிஸ்பீஸ் (Rice Krispies) - 1/2 கப்
* சர்க்கரை பவுடர் - 1/2 கப்
* விருப்பமான உலர் பழங்கள் மற்றும் டூட்டி ஃபுரூட்டி - 1/4 கப்
* வெண்ணெய் - 1/4 கப்
* தேங்காய் எண்ணெய் - 1/8 கப்
செய்முறை:
* ஒரு பௌலில் உலர்ந்த துருவிய தேங்காய், பால் பவுடர் மற்றும் அரிசி கிறிஸ்பீஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சர்க்கரை பவுடர், உலர்ந்த பழங்களில் பாதியைப் போட்டு மீதியை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
* பிறகு ஒரு கரண்டியால் கலவையை நன்கு கிளறி விடுங்கள்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு உருகியதும், தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* இப்போது இந்த வெண்ணெயை பௌலில் உள்ள கலவையில் ஊற்றி, நன்கு கரண்டியால் கிளறி விட வேண்டும். ஒருவேளை கலவையானது ஒன்றுசேராமல் உதிரியாகவே இருந்தால், மேலும் சிறிது தேங்காய் எண்ணெயை சேர்த்துக் கொள்ளலாம்.
* அதன் பின் அதை ஒரு ட்ரேயில் போட்டு பரப்பி, தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். பின் மேலே எஞ்சிய உலர்ந்த பழங்களை பரப்பி, மீண்டும் தட்ட வேண்டும்.
* பின் அந்த ட்ரேயை ஒரு க்ளிங் வ்ராப்பர் (Cling Wrap) கொண்டு மூடி, ஃப்ரிட்ஜில் குறைந்தது 30 நிமிடம் வைத்து எடுத்து, பின் சதுர துண்டுகளாக கத்தி பயன்படுத்தி வெட்டினால், சுவையான ஒயிட் கிறிஸ்துமஸ் ஸ்லைஸ் ரெசிபி தயார்...



Click it and Unblock the Notifications