Latest Updates
-
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
இட்லி-தோசைக்கு சூப்பராக இருக்கும்.. சௌ சௌ கொத்தமல்லி சட்னி
Chow-Chow Kothamalli Chutney: இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சௌ சௌ உள்ளதா?
அப்படியானால் அந்த சௌ சௌ மற்றும் கொத்தமல்லியைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையில் சட்னி ஒன்றை செய்யுங்கள். இந்த சௌ சௌ கொத்தமல்லி சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு சௌ சௌ கொத்தமல்லி சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ கொத்தமல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சௌ சௌ - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* கொத்தமல்லி - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
* புளி - சிறிது
* வரமிளகாய் - 3
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் சௌ சௌ காயை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு,
துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் துண்டுகளாக்கப்பட்ட சௌ சௌவை சேர்த்து வதக்கி, நன்கு
வேக வைகக வேண்டும்.
* சௌ சௌ வெந்ததும், புளியை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன்
கொத்தமல்லியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ண்ய ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான சௌ சௌ கொத்தமல்லி சட்னி
தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
