Latest Updates
-
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா?
1 கப் சின்ன வெங்காயம், 2 பூண்டு இருந்தா டக்குனு இந்த தொக்கை செய்யுங்க...தோசை, சப்பாத்திக்கு டாப்பா இருக்கும்!
Chinna Vengaya Thokku Recipe in Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் தோசை அல்லது சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் காய்கறி எதுவுமே இல்லையா? வெறும் வெங்காயம் மட்டும் தான் உள்ளதா? அப்படியானால் அதை வைத்தே அட்டகாசமான சைடிஷ் ஒன்றை செய்யலாம்.
இந்த தொக்கை சின்ன வெங்காயத்தை வைத்து செய்தால் கூடுதல் சுவையாக இருக்கும். ஒருவேளை சின்ன வெங்காயம் இல்லையென்றால் பெரிய வெங்காயத்தை வைத்தே செய்யலாம். இந்த சின்ன வெங்காய தொக்கு சப்பாத்தி மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது சில நிமிடங்களில் செய்து விடக்கூடிய எளிதான மற்றும் சுவையான ரெசிபியாகும்.

உங்களுக்கு சின்ன வெங்காய தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சின்ன வெங்காய தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் சின்ன வெங்காயம்
- 20 பூண்டு பல்
- ½ டீஸ்பூன் புளி
- 6 வர மிளகாய்
- 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- ¼ டீஸ்பூன் கடுகு
- ஒரு கொத்து கறிவேப்பிலை
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
செய்முறை:
- ஒரு மிக்சி ஜாரில் உரித்த சின்ன வெங்காயம், உரித்த பூண்டு மற்றும் புளி ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- பின் வர மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
- இதை தண்ணீர் சேர்க்காமல் மென்மையான விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கி அதில் அரைத்த பச்சை வெங்காய தொக்கை சேர்க்கவும்.
- தொக்கு கெட்டியாகி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- குறைந்த தீயில் குறைந்தது 10 நிமிடங்கள் வதக்கிக் கொண்டே இருங்கள், அது பாத்திரத்தில் ஒட்டாமல் ஒன்று சேர்ந்து வரும், மேலும் நிறம் அடர் நிறமாக மாறும். தொக்கு இந்த நிலையை அடைந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
- ஒரு சிறிய கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி, கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கவும்.
- இந்த தாளிப்பை தொக்கில் சேர்த்து நன்றாக கிளறினால் சூப்பரான சின்ன வெங்காய தொக்கு ரெடி!
- இது குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் 3 நாட்கள் வரையிலும், குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 10 நாட்கள் வரையிலும் கெட்டுப்போகாமல் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
