இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted By:

Chinna Vengaya Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? அதற்கு சைடு டிஷ்ஷாக வீட்டில் உள்ளோர் சட்னி, சாம்பாரைத் தான் விரும்பி சாப்பிடுவார்களா? அதுவும் சட்னியைத் தான் அதிகம் கேட்பார்களா? இதனால் அடிக்கடி சட்னியை செய்வீர்களா? அப்படியானால் எப்பவும் ஒரே மாதிரி சட்னியை செய்யாமல், அவ்வப்போது வித்தியாசமான சுவையிலும் சட்னியை செய்யுங்கள்.

Chinna Vengaya Chutney How To Make Small Onion Chutney Recipe

அதுவும் வீட்டில் சின்ன வெங்காயம் இருந்தால், அதைக் கொண்டு இந்த பக்குவத்தில் வெங்காய சட்னியை செய்யுங்கள். இந்த சட்னியை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒருமுறை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்ய வேண்டியிருப்பதோடு, போட்டி போட்டு சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சின்ன வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4-5
* சின்ன வெங்காயம் - 200 கிராம்
* புளி - சிறிய துண்டு
* கறிவேப்பிலை - 2 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பங
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாயை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக சட்னி தாளிப்பதற்கு ஒரு கரண்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான சின்ன வெங்காய சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, October 15, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion