Latest Updates
-
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
1 கப் அரிசி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்து கோவில்கள் அனைத்தும் ஏன் எப்போதும் 12 மணிக்கு மேல் மூடப்படுகிறது தெரியுமா? -
வாஸ்துப்படி இந்த 3 செடிகளை வீட்டில் தவறான இடத்துல வெக்காதீங்க.. இல்ல பணம் தண்ணியா செலவாகும்..
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Chinna Vengaya Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? அதற்கு சைடு டிஷ்ஷாக வீட்டில் உள்ளோர் சட்னி, சாம்பாரைத் தான் விரும்பி சாப்பிடுவார்களா? அதுவும் சட்னியைத் தான் அதிகம் கேட்பார்களா? இதனால் அடிக்கடி சட்னியை செய்வீர்களா? அப்படியானால் எப்பவும் ஒரே மாதிரி சட்னியை செய்யாமல், அவ்வப்போது வித்தியாசமான சுவையிலும் சட்னியை செய்யுங்கள்.

அதுவும் வீட்டில் சின்ன வெங்காயம் இருந்தால், அதைக் கொண்டு இந்த பக்குவத்தில் வெங்காய சட்னியை செய்யுங்கள். இந்த சட்னியை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒருமுறை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்ய வேண்டியிருப்பதோடு, போட்டி போட்டு சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சின்ன வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4-5
* சின்ன வெங்காயம் - 200 கிராம்
* புளி - சிறிய துண்டு
* கறிவேப்பிலை - 2 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பங
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வரமிளகாயை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுக்க
வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வரும்
வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து
நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக சட்னி தாளிப்பதற்கு ஒரு கரண்டியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான சின்ன
வெங்காய சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
