Latest Updates
-
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
ருசியான... சில்லி பன்னீர்
மாலை வேளையில் மழைப் பெய்யும் போது, நன்கு சூடாக, காரமாக அதே சமயம் சுவையான ஒரு ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட நினைத்தால், சில்லி பன்னீர் செய்து சுவையுங்கள்.
பால் பொருட்களுள் ஒன்றான பன்னீரில் கால்சியம் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாகவும் எலும்புகள் வலிமையுடனும் இருக்கும். அதற்கு பன்னீரை பலவாறு சமைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு மாலை வேளையில் மழைப் பெய்யும் போது, நன்கு சூடாக, காரமாக அதே சமயம் சுவையான ஒரு ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட நினைத்தால், சில்லி பன்னீர் செய்து சுவையுங்கள். இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் ரெசிபி.
MOST READ: மொறுமொறுப்பான... பன்னீர் நக்கட்ஸ்
உங்களுக்கு சில்லி பன்னீர் ரெசிபியை எப்படி செய்தென்று தெரிந்து கொள்ள விரும்பினால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். அதைப் படித்து செய்து சுவைத்து, உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* குடைமிளகாய் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியன்/கொத்தமல்லி - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
ஊற வைப்பதற்கு...
* மைதா - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் சிறிது ஊற்றி, அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
* பின் அதில் குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் டோஸ்ட் செய்து வைத்துள்ள பன்னீரைப் போட்டு ஒருமுறை கிளறி விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லி அல்லது ஸ்பிரிங் ஆனியனைத் தூவினால், சில்லி பன்னீர் ரெடி!



Click it and Unblock the Notifications
