Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சில்லி முட்டை போண்டா
மாலை வேளையில் உங்கள் வீட்டில் முட்டை இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அது தான் சில்லி முட்டை போண்டா.
மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் வேளையில் பலருக்கும் சூடாக பஜ்ஜி, போண்டா சாப்பிட வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதுவும் மழை பெய்தால் சொல்லவே வேண்டாம் இந்த ஆசை இன்னும் அதிகம் இருக்கும். இந்நிலையில் உங்கள் வீட்டில் முட்டை இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அது தான் சில்லி முட்டை போண்டா. இந்த ரெசிபியை மாலை வேளையில் பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு சில்லி முட்டை போண்டா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சில்லி முட்டை போண்டாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
முட்டை போண்டாவிற்கு...
* வேக வைத்த முட்டை - 4
* கடலை மாவு - 3/4 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
முட்டை சில்லிக்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் முட்டை போண்டாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு நீர் சேர்த்து ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும் வேக வைத்த முட்டைகளை இரண்டாக வெட்டி, போண்டா மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது முட்டை போண்டா தயார்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து வதக்கி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மசாலா பொடிகளை ஒவ்வொன்றாக சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* மசாலாவில் இருந்து பச்சை வாசனை போனதும், முட்டை போண்டாக்களை சேர்த்து நன்கு கிளறி இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சில்லி முட்டை போண்டா தயார்.
Image Courtesy: steffisrecipes



Click it and Unblock the Notifications
