Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சில்லி சீஸ் பஜ்ஜி
உங்களுக்கு வெறும் வெங்காயம், உருளைக்கிழங்கு கொண்டு பஜ்ஜி செய்து சாப்பிட்டு போரடித்திருந்தால், பஜ்ஜி மிளகாயைக் கொண்டு அதனுள் சீஸ் வைத்து ஒரு அற்புதமான சுவையுடைய பஜ்ஜி செய்யுங்கள்.
மாலை வேளையில் அதுவும் மழை பெய்யும் போது, காரமாகவும், மொறுமொறுப்பாகவும், சூடாகவும் சாப்பிட தோன்றும். அதுவும் பஜ்ஜி சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு வெறும் வெங்காயம், உருளைக்கிழங்கு கொண்டு பஜ்ஜி செய்து சாப்பிட்டு போரடித்திருந்தால், பஜ்ஜி மிளகாயைக் கொண்டு அதனுள் சீஸ் வைத்து ஒரு அற்புதமான சுவையுடைய பஜ்ஜி செய்யுங்கள். இந்த பஜ்ஜி பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு சில்லி சீஸ் பஜ்ஜி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சில்லி சீஸ் பஜ்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* பஜ்ஜி மிளகாய் - 6
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
* வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* சீஸ் - 1 கப் (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - 4 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் துருவிய சீஸ், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் பஜ்ஜி மிளகாயை கீறி அதனுள் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, உள்ளே சீஸ் கலவையை வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு, பேக்கிங் சோடா, பெருங்காயத் தூள் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், சீஸ் வைத்த மிளகாயை பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான சில்லி சீஸ் பஜ்ஜி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications