Latest Updates
-
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க...
பூரிக்கு ஒருடைம் இந்த மாதிரி சிக்கனை செய்யுங்க... டேஸ்ட் சும்மா அள்ளும்..
Chicken Thokku Recipe In Tamil: விடுமுறை நாட்களில் பெரும்பாலானோரின் வீடுகளில் காலையில் நிச்சயம் ஸ்பெஷலான அசைவ உணவு தான் இருக்கும். உங்கள் வீட்டிலும் அப்படி தானா? இன்று உங்கள் வீட்டில் பூரி செய்யப் போகிறீர்களா? அப்படியானால் அந்த பூரிக்கு சிக்கனை வாங்கி தொக்கு செய்யுங்கள்.
இந்த சிக்கன் தொக்கு பூரி, சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு சிக்கன் தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1/2 கிலோ
* உப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
தொக்குவிற்கு...
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 3
* கறிவேப்பிலை - 3 கொத்து
* சின்ன வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கறிமசாலா தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு 2 முறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் கழுவிய சிக்கனை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் உப்பு, மஞ்சள்
தூள், மிளகாய் தூள், தயிர் சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 1
மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள்,
கறிமசாலா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து, 2 நிமிடம் நன்கு கிளறி விட
வேண்டும்.
* பிறகு ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி, 5 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின் தொக்குவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கிளறி, குக்கரை மூடி, குறைவான தீயில் வைத்து, 2 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி கிளறினால்,
சுவையான சிக்கன் தொக்கு தயார்.
Image Courtesy: RECIPES IN MY WAY NON VEG



Click it and Unblock the Notifications