Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
சிக்கனை வைச்சு இந்த மாதிரி சமோசா செஞ்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஆசையா சாப்பிடுவாங்க...!
Chicken Samosa Recipe in Tamil: 90-களின் காலகட்டத்தில் சமோசா காய்கறிகள் மற்றும் வெங்காயத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு செய்யப்படும். ஆனால் இப்போது உருளைக்கிழங்கு சமோசா, காய்கறி சமோசா, முட்டை சமோசா, காளான் சமோசா, பன்னீர் சமோசா, சிக்கன் சமோசா, மட்டன் சமோசா மற்றும் பல அசைவ வகை சமோசா என பலவற்றை தயார் செய்கிறார்கள்.
என்ன தான் கடைகளில் வாங்கி சாப்பிட்டாலும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வீட்டில் செய்பவர்கள் எப்படி செய்ய வேண்டும் என யோசிப்பார்கள். சரி வாங்க இப்போ சிக்கன் சமோசா எப்படி செய்வது என இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:
- சிக்கன் - ¼ கிலோ
- கொத்தமல்லி இலை - ¼ கப்
- எண்ணெய் - தேவையான அளவு
- மைதா - 3 கப்
- உப்பு - தேவையான அளவு
- பச்சை மிளகாய் - 4
- கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்
- பச்சை பட்டாணி - ¼ கப்
- பெரிய வெங்காயம் - 2
செய்முறை:
- எலும்பில்லாத சிக்கன் வாங்கி உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து
சுத்தமாக அலசி எடுத்து கொள்ளவும்.
- அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
அல்லது கடையிலேயே கொத்திய சிக்கன் வாங்கி கொள்ளலாம்.
- மைதா மாவுடன் தேவையான அளவு உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து
சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- பச்சை பட்டாணியை தண்ணீர் வேக வைத்து தண்ணீரை வடித்து எடுத்து
கொள்ளவும்.
- பெரிய வெங்காயத்தை தோல் உரித்து கழுவி பொடியாக நறுக்கி
கொள்ளவும்.
- பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் சிக்கன், மஞ்சள், தேவையான அளவு உப்பு மற்றும்
தண்ணீர் சேர்த்து வற்றும் வரையில் நன்கு வேக வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய
விடவும்.
- பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து சிறிது வதக்கி கரம்
மசாலா, மற்றும் உப்பு சேர்க்கவும்.
- அதனுடன் வேக வைத்த பட்டாணி, சிக்கன், பச்சை மிளகாய், மற்றும் மல்லி
இலை சேர்த்து நன்கு கெட்டியாகும் வரையில் கிளறி இறக்கி கொள்ளவும்.
- மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.
- பிசைத்து வைத்த மாவை ஒரு எலுமிச்சை அளவிற்கு நன்றாக உருட்டிக்
கொள்ளவும்.
- அதை சப்பாத்திக்கு தேய்ப்பதை போல் வட்டமாக தேய்த்து இரண்டாக வெட்டி
கொள்ளவும்.
- இதே போல் மீதம் இருக்கும் மாவையும் தேய்த்து வெட்டி வைத்து
கொள்ளவும்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்த மாவை அதில் போட்டு
லேசாக சூடானதும் மறுபுறம் திருப்பி விட்டு எடுத்து கொள்ளவும்.
- இதே போல் மீதம் இருக்கும் மாவையும் போட்டு எடுத்து வைத்து
கொள்ளவும்.
- இப்போது அரை வட்டத்தின் மேல் பகுதியை முக்கோண வடிவில் மடித்து
கரைத்து வைத்த மைதா கலவையை வைத்து ஒட்டி கொள்ளவும்.
- அதில் வேக வைத்த மசாலா சேர்த்து நன்றாக மடித்து ஒட்டவும்.
- இதே போல் எல்லா சமோசாக்களையும் தயார் செய்து கொள்ளவும்.
- பின் எண்ணெய்யை சூடாக்கி அதில் மடித்து வைத்த சமோசா சேர்த்து
பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான சிக்கன் சமோசா ரெடி!



Click it and Unblock the Notifications


