Latest Updates
-
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும் -
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
சிக்கன் மலாய் கபாப் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
Chicken Malai Kebab Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் வாங்கி சமைப்பீர்களா? அந்த சிக்கனை எப்போதும் ஒரே மாதிரி 65 தான் பெரும்பாலும் செய்து சாப்பிடுவீர்களா? இதனால் உங்ளுக்கு சிக்கன் சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை சிக்கன் மலாய் கபாப் செய்து சாப்பிடுங்கள். இந்த கபாப் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

முக்கியமாக இதை எவ்வளவு நேரம் ஊற வைக்கிறோமோ, அந்த அளவில் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். குறிப்பாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். பெரும்பாலும் இப்படியான சிக்கன் ரெசிபியை ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட்டுகளில் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் வீட்டிலேயே எளிய பொருட்களைக் கொண்டு இந்த ரெசிபியை செய்யலாம்.
உங்களுக்கு சிக்கன் மலாய் சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் மலாய் கபாப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருன்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* வெள்ளை/கருப்பு மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கெட்டி தயிர் - 1/2 கப்
* பிரஷ் க்ரீம் - 1/4 கப்
* எலுமிச்சை - 1
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - 1 டீஸ்பூன்
* வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் எலும்பில்லாத சிக்கனை நீரில் நன்கு கழுவி எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகுத் தூள், கரம் மசாலா
ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கெட்டி தயிர்,
பிரஷ் க்ரீம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் 1 எலுமிச்சையின் சாறு, சுவைக்கேற்ப உப்பு மற்றும்
கொத்தமல்லியை சேர்த்து கைகளால் நன்கு பிரட்டி, 2-6 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* சிக்கன் நன்கு ஊறியதும், ஸ்க்யூவர் ஸ்டிக்ஸ் (skewer sticks)
எடுத்து, சிக்கனை அந்த குச்சியில் சொருகி விட வேண்டும்.
* பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெயை தடவ
வேண்டும்.
* அதன் பின் இந்த சிக்கனை அதில் வைத்து, மூடி வைத்து மிதமான தீயில் 10
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, சிக்கன் மேல் வெண்ணெயை தடவி, திருப்பி
போட்டு மீண்டும் மூடி வைத்து 5-7 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
இறுதியாக கறித்துண்டை எடுத்து நெருப்பில் நன்கு சுட்டு, அதை ஒரு சிறிய
கிண்ணத்தில் வைத்து, அந்த கிண்ணத்தை சிக்கன் நடுவே வைத்து,
கறித்துண்டின் மேல் நெய் சிறிது ஊற்றி, 2 நிமிடம் மூடி வைத்து, பின்
பரிமாறினால் சுவையான சிக்கன் மலாய் கபாப் தயார்.



Click it and Unblock the Notifications
