Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்..
Arachuvitta Kozhi Kuzhambu Recipe In Tamil: வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வந்தாலே வீட்டில் அசைவ உணவுகளை பலவிதங்களில் சமைத்து சாப்பிடுவோம். அதுவும் உங்கள் வீட்டில் சிக்கனை தான் அதிகம் வாங்குவீர்களா? அப்படி வாங்கும் சிக்கனை நிச்சயம் குழம்பு செய்வீர்களா? பொதுவாக சிக்கன் குழம்பை பலவிதங்களில் செய்யலாம். அதில் ஒன்று தான் மசாலா அரைத்து செய்யப்படும் சிக்கன் குழம்பு. இப்படி செய்யும் குழம்பு இட்லி, சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு அரைச்சுவிட்ட கோழி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரைச்சுவிட்ட கோழி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு..
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 200 கிராம்
* பூண்டு - 10-12 பல்
* இஞ்சி - 2 இன்ச் (நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* துருவிய தேங்காய் - 6 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
குழம்பு தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சிக்கன் - 1 கிலோ
* மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* அரைத்த தேங்காய் விழுது
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பட்டை, கிராம்பு, சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றை
சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குழம்பு தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை,
பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொயைக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 1 நிமிடம்
வதக்கி, பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும்
மஞ்சள் தூள் சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, மூடி
வைத்து, 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து சிக்கனை வேக வைக்க
வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் மிளகாய் தூள், மல்லித்
தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்கு
கிளிறி தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால்
உப்பு சேர்த்து கலந்து மூடி வைத்து 15 நிமிடம் சிக்கனை வேக வைக்க
வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து கொத்தமல்லியைத் தூவி கிளறி, 5 நிமிடம்
கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான அரைச்சுவிட்ட கோழி குழம்பு
தயார்.



Click it and Unblock the Notifications