Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப சந்தோஷமா இருக்கப்போறாங்களாம் -
வார ராசிபலன் (24 May 2026-30 May 2026) - மே மாதத்தின் கடைசி வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..! -
புதன் தனது சொந்த ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பலாக்கொட்டை இருந்தா இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இந்தியாவின் தேசிய மரம் எது? அது தேசிய மரமானதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
June Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஜூன் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ட்விஷா சர்மா வழக்கில் அதிர்ச்சி! திருமண வாழ்க்கையில் இந்த 5 அறிகுறிகள் தெரிந்தால் உஷாராக இருங்கள்! -
சப்பாத்திக்கு இந்த ஸ்டைல்-ல முட்டை கிரேவி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் அனைத்து கடவுள்களாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
போலீஸ் அதிகாரி என நம்பி ஏமாந்த பெண்கள்! டேட்டிங் ஆப் மூலம் நடந்த அதிர்ச்சி AI மோசடி!
சப்பாத்தி, பூரிக்கு இந்த பக்குவத்துல சிக்கன் கெட்டி குழம்பை செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
Chicken Getti Kuzhambu Recipe In Tamil: வார விடுமுறை வந்தாலே காலை முதல் இரவு வரை வெஜ் உணவுகளுக்கு லீவு விட்டு, அசைவ உணவுகளை செய்து சாப்பிடுவோம். அதுவும் அப்போது பலவிதமான வெரைட்டியான அசைவ ரெசிபிக்களை சமைத்து பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிடுவோம்.

அதுவும் விடுமுறை நாளில் காலை வேளையில் பூரி அல்லது சப்பாத்தியை செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக சிக்கனை செய்து சாப்பிடுவோர் ஏராளம். உங்கள் வீட்டிலும் அப்படி தானா? முக்கியமாக எப்போதும் பூரி, சப்பாத்திக்கு ஒரே சுவையில் தான் சிக்கன் சைடு டிஷ் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை சிக்கன் கெட்டி குழம்பை செய்து சாப்பிடுங்கள். இந்த குழம்பு சுவையாக இருப்பதால், வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.
இந்த சிக்கன் கெட்டி குழம்பு ரெசிபி குறித்து அபூர்வாஸ் விருந்து என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த சிக்கன் கெட்டி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் கெட்டி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு..
* சிக்கன் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/2
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு..
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தேங்காய் - 1/4 மூடி (துருவியது)
* முந்திரி - 10
* கசகசா - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* ஊற வைத்த சிக்கன்
* வெங்காய விழுது
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், தயிர் சேர்த்து
பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் வெதுவெதுப்பான நீரில் முந்திரி மற்றும் கசகசாவை சேர்த்து 10
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு சேர்த்து பொரிய விட்டு, நறுக்கிய வெங்காயத்தை
சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
முந்திரி மற்றும் கசகசாவை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, நன்கு
வதக்க வேண்டும்.
* பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து கிளறி, நறுக்கி
வைத்துள்ள தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் குழம்பு மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து
கிளறி விட வேண்டும்.
* பிறகு ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளிற, கெட்டி
குழம்புக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி வைத்து 2
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால்,
காரசாரமான சிக்கன் கெட்டி குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications