Latest Updates
-
June 2026 Horoscope: ஜூன் மாதம் இந்த 4 ராசிக்காங்க வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்கும் மாதமாக இருக்குமாம் -
சூரியனின் பார்வையால் ஜூன் முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கப்போகுது..! -
அசைவ உணவு அதிகம் உண்ணும் டாப் 10 இந்திய மாநிலங்கள் - முதலிடத்தில் எந்த மாநிலம் இருக்கு தெரியுமா? -
உங்ககிட்ட இந்த 7 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க உடம்பு ஆரோக்கியமா இல்லன்னு அர்த்தம்.. உஷார்.. -
மங்களூர் நெய் சிக்கன் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க, வேற லெவல் சைடிஷா இருக்கும் -
ஜூன் இறுதியில் உருவாகும் சக்தி வாய்ந்த அரிய யோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுது..! -
சூரியன் மிதுன ராசிக்கு செல்வதால் ஜூன் மாதத்தில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்தி, பூரிக்கு இந்த பக்குவத்துல சிக்கன் கெட்டி குழம்பை செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப சந்தோஷமா இருக்கப்போறாங்களாம் -
வார ராசிபலன் (24 May 2026-30 May 2026) - மே மாதத்தின் கடைசி வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..!
செஃப் தீனா ஸ்டைல் சிக்கன் தொக்கு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
Chef Deena Style Chicken Thokku Recipe In Tamil: சன்டே வந்தாலே ஒரே குஷி தான். ஏனெனில் அன்று தான் வீட்டில் விதவிதமான அசைவ உணவுகளை சமைத்து, பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிட முடியும். அதுவும் உங்களுக்கு விடுமுறை நாட்களில் வித்தியாசமான ரெசிபிக்களை செய்து சாப்பிட பிடிக்குமா? உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கனை தான் வாங்கி சமைப்பீர்களா? அப்படியானால் ஒருமுறை செஃப் தீனா ஸ்பெஷல் சிக்கன் தொக்கு ரெசிபியை செய்து சாப்பிடுங்கள்.

இந்த சிக்கன் தொக்கு ரெசிபியின் ஸ்பெஷலே, இதற்கு வெங்காயம், தக்காளி என்று எதுவும் தேவையில்லை. தயிரும், மசாலா பொருட்களும் இருந்தாலே போதும். இந்த சிக்கன் தொக்கு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த ரெசிபியை ட்ரை செய்யலாம். இந்த சிக்கன் தொக்கு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
இந்த சிக்கன் தொக்கு ரெசிபியை செஃப் தீனா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு செஃப் தீனா ஸ்டைல் சிக்கன் தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செஃப் தீனா ஸ்டைல் சிக்கன் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1/2 கிலோ
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* கெட்டி தயிர் - 100 மிலி
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 12 பல் (தோலுடன் தட்டியது)
* வரமிளகாய் - 4
* கசூரி மெத்தி - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அத்துடன்
இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள்
ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு, கெட்டி தயிர் மற்றும் கொத்தமல்லியை
சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி, மூடி வைத்து
30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 30 நிமிடம் கழித்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை
சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாயை இரண்டாக உடைத்து சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்னர் அதில் கசூரி மெத்தி மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி,
சிக்கனை நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான சிக்கன் தொக்கு
தயார்.



Click it and Unblock the Notifications