Latest Updates
-
இந்தியர்களே நுழைய முடியாத இந்தியாவிலுள்ள இடங்கள் - இதில் 3 இடங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்காம் தெரியுமா? -
சூரியன்-சந்திரனால் உருவாகும் வியாதிபாத யோகத்தால் ஜூலை மாதம் பணக்கஷ்டத்தில் சிக்கப்போகும் 4 ராசிகள் -
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும்
பூரிக்கு தக்காளி சேர்க்காம சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
Chicken Gravy Without Tomato Recipe In Tamil: விடுமுறை நாட்களில் காலையில் உங்கள் வீட்டில் பூரி செய்யும் வழக்கம் உள்ளதா? அப்படி பூரி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ் சிக்கன் அல்லது மட்டனாக இருக்குமா? அதுவும் பூரிக்கு சிக்கனை சைடு டிஷ்ஷாக சமைப்பதாக இருந்தால், கிரேவி தான் செய்ய வேண்டும்.
ஆனால் சிக்கன் கிரேவி செய்ய வீட்டில் தக்காளி இல்லையா? கவலைப்பட வேண்டாம். தக்காளி சேர்க்காமலேயே சூப்பராக சிக்கன் கிரேவி செய்யலாம். இந்த சிக்கன் கிரேவி, சாதம், சப்பாதி, பூரியுடன் சாப்பிடஅற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி சேர்க்காத சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சேர்க்காத சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்ள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 3/4 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை - பாதி
அரைப்பதற்கு...
* முந்திரி - 10
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமல்லி - 2 டீஸ்பூன்
* தனிமிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கிரேவிக்கு...
* எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 சிறிய துண்டு
* கிராம்பு - 4
* பிரியாணி இலை - 2
* அன்னாசிப்பூ - 1
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை எடுத்து அதை நன்கு நீரில் கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பாதி
எலுமிச்சையை பிழிந்து, கைகளால் நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து 30
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் முந்திரி, மிளகு, சீரகம், சோம்பு, வரமல்லி,
தனிமிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, அன்னாசிப்பூ
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து, அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு 2 நிமிடம்
கிளறி விட வேண்டும்.
* பின்பு மூடி வைத்து சிக்கனை ஒரு 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி,
கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 20 நிமிடம்
மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி மிளகுத் தூளை தூவினால்,
சுவையான சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications