Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
செட்டிநாடு காலிஃப்ளவர் சூப்
உங்களுக்கு தினமும் ஒரே மாதிரியான சூப் குடிச்சு அலுத்துப்போச்சா? வித்தியாசமான சுவையுடைய சூப் சுவைக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு காலிப்ளவர் சூப் செய்து குடியுங்கள்.
நீங்கள் டயட்டில் இருக்கீங்களா? அடிக்கடி சூப் குடிப்பீங்களா? உங்களுக்கு தினமும் ஒரே மாதிரியான சூப் குடிச்சு அலுத்துப்போச்சா? வித்தியாசமான சுவையுடைய சூப் சுவைக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு காலிப்ளவர் சூப் செய்து குடியுங்கள். இந்த சூப்பை அப்படியே குடிக்கலாம் அல்லது சாதத்தில் ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம். உங்களுக்கு செட்டிநாடு காலிஃப்ளவர் சூப் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே செட்டிநாடு காலிஃப்ளவர் சூப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காபிஃப்ளவர் - 1 1/4 கப்
* பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பூண்டு - 3 பல்
* பச்சை மிளகாய் - 4-5 (நீளமாக கீறியது)
* இஞ்சி - 1/2 இன்ச்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1-2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* பிரியாணி இலை - 1
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கல்பாசி - 1
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு, போதுமான அளவு நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது காலிஃப்ளவரைப் போட்டு, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். காலிஃப்ளவர் முக்கால்வாசி வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, நீரை வடிகட்டி தனியாக காலிஃப்ளவரை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, வேக வைத்துள்ள பாசிப்பருப்பை மசித்து சேர்த்து, அத்துடன் 1 1/2-2 கப் நீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு வேக வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து, 3-4 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து, இறுதியாக கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து அடுப்பை அணைத்தால், சுவையான செட்டிநாடு காலிஃப்ளவர் சூப் தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications











