Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் சாம்பார் வைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
World Stroke Day 2026: உயர் இரத்த அழுத்தம் பக்கவாத அபாயத்தை அதிகரிப்பது எப்படி? விளக்கும் டாக்டர்! -
இந்திய வரலாற்றில் 49 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த ஒரே அரசர் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா? -
வரப்போகும் குரு பெயர்ச்சிக்கு பின் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. -
ஹோட்டல் ஸ்டைல் சின்ன வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
அக்டோபர் 29, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள தோல்விகள் துரத்தப்போகுதாம் -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு பிரச்சனையே வாழ்க்கையா இருக்கப்போகுது! -
சூரியன்-புதன் விருச்சிக ராசியில் இணைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாத்ரூம்மில் இந்த 5 பொருட்களை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தைப் பாருங்க.. -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி கதம்ப பொரியல் செய்யுங்க - டாப்பா இருக்கும்
மணமணக்கும்.. செட்டிநாடு வெங்காய ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசி அள்ளும்..
Chettinad Vengaya Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் ரசப் பிரியர்களா? இதனால் தினமும் உங்கள் வீட்டில் ரசம் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் ரசம் செய்வீர்களா? இதுவரை நீங்கள் எத்தனையோ ரசம் செய்திருக்கலாம். ஆனால் வெங்காய ரசம் செய்துள்ளீர்களா? ஆம், இந்த செட்டிநாடு வெங்காய ரசம் மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். மேலும் இந்த ரசமானது ஒரு புதுமையான சுவையில் இருப்பதால், ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு சொல்வார்கள்.

உங்களுக்கு இந்த செட்டிநாடு வெங்காய ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு வெங்காய ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
இடிப்பதற்கு...
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 1
கொதிக்க வைப்பதற்கு...
* பழுத்த தக்காளி - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து வடிகட்டிய
சாறு)
* தண்ணீர் - 5 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 கையளவு (வேக வைத்தது)
* இடித்த பொருட்கள்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 15 (இடித்துக் கொள்ளவும்)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
பிற பொருட்கள்..
* கொத்தமல்லி - சிறிது
* வெல்லம் - சிறிது
செய்முறை:
* முதலில் இடி உரலில் மிளகு, சீரகம் சேர்த்து நன்கு இடித்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இடித்து, ஒரு பச்சை
மிளகாயை சேர்த்து லேசாக இடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் தக்காளியை துண்டுகளாக்கி சேர்த்து,
அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து
கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அதன் பின் அதில் புளிச்சாறு சேர்த்து, 5 கப் நீரை ஊற்றி, மஞ்சள்
தூள் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து, நன்கு பச்சை வாசனை போக
கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்த துவரம் பருப்பை நன்கு மசித்து, நீருடன்
அப்படியே ஊற்றி, அதோடு இடித்து வைத்துள்ள பச்சை மிளகாய் கலவையை
சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், வரமிளகாய்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயத்தை இடித்து சேர்த்து, அத்துடன்
பெருங்காயத் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, வெங்காயம் கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்கி இறக்கி, ரசத்துடன் சேர்க்க வேண்டும்.
* பிறகு அந்த ரசத்தை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் கொத்தமல்லி
மற்றும் சிறிது வெல்லத்தை சேர்த்து, நுரைக்கட்டத் தொடங்கியதும்,
அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு வெங்காய ரசம்
தயார்.



Click it and Unblock the Notifications
