Latest Updates
-
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
செட்டிநாடு வெள்ளை குருமா
உங்கள் வீட்டில் உள்ளோர் நிறைய காய்கறிகளை சாப்பிடும் வகையில் ஒரு ருசியான செட்டிநாடு வெள்ளை குருமா செய்து கொடுங்கள். இந்த குருமா சப்பாத்தி, பூரி, பரோட்டாவிற்கு அட்டகாசமாக இருக்கும்.
உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் உள்ளோர் நிறைய காய்கறிகளை சாப்பிடும் வகையில் ஒரு ருசியான செட்டிநாடு வெள்ளை குருமா செய்து கொடுங்கள். இந்த குருமா சப்பாத்தி, பூரி, பரோட்டாவிற்கு அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் அளவான காரத்தில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு வெள்ளை குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு வெள்ளை குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 1
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* காய்கறிகள் - 1 கப் (கேரட், பட்டாணி, பீன்ஸ், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1 கப்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 4-5
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 4-5
* கிராம்பு - 1
* ஏலக்காய் - 2
* பட்டை - 1
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பிளெண்டரில் ஒரு கப் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, சீரகம், சோம்பு, முந்திரி, கிராம்பு, பட்டை, ஏலக்காய், பச்சை மிளகாய் ஆகியவற்றை எடுத்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, காய்கறிகளை சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், செட்டிநாடு வெள்ளை குருமா தயார்.



Click it and Unblock the Notifications
