Latest Updates
-
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா?
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும்
Chettinad Urulaikilangu Podimas Recipe in Tamil: சில காய்கறிகள் அனைவருக்குமே மிகவும் பிடித்தவையாக இருக்கும். அதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை பொரியல் செய்தாலும் சரி, குழம்பு வைத்தாலும் சரி வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சிக்கனைப் போலவே உருளைக்கிழங்கையும் பல வழிகளில் சமைக்கலாம். அப்படி ஒரு தனித்துவமான உருளைக்கிழங்கு பொடிமாஸ்.

இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் செட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமானது. சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கு ப்ரை செய்ய நினைத்தால், இந்த பொடிமாஸை செய்து பாருங்கள். இதன் ஸ்பெஷலே இதற்கென தனியாக அரைத்து சேர்க்கப்படும் ஒரு மசாலாதான். இப்படி செய்யும் உருளைக்கிழங்கு செய்யும் போது வீட்டில் எல்லோருமே அதிகமாக சாப்பிடுவார்கள். இது சாம்பார் சாதம், ரசம் சாதம் மதுரம் தயிர் சாதம் என அனைத்திற்கும் சூப்பராக இருக்கும். இதை சப்பாத்திக்கு கூட சைடிஷாக வைத்து சாப்பிடலாம்.
உங்களுக்கு செட்டிநாடு உருளைக்கிழங்கு பொடிமாஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைக்க வேண்டியவை:
- ¼ கப் துருவிய தேங்காய்
- 3 பல் பூண்டு
- 4 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 ஸ்பூன் பொட்டுக்கடலை
பொடிமாஸ் செய்ய:
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- ½ டீஸ்பூன் கடுகு
- ½ டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 சிறிய துண்டு பட்டை
- 15 சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 1 கொத்து கறிவேப்பிலை
- 4 நடுத்தர அளவு உருளைக்கிழங்கு (வேகவைத்து,சிறு துண்டுகளாக
நறுக்கியது)
- தேவையான அளவு உப்பு
- கால் கப் தண்ணீர்
செய்முறை:
- முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, சோம்பு மற்றும் பொட்டுக்கல்லையை சேர்த்து சிறிதளவு தண்ணீருடன் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும். அதன்பின் பிரெஷாக அரைத்த மசாலா மற்றும் உப்பைச் சேர்க்கவும்.
- அனைத்தையும் நன்றாக கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும்.
- இதை மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
- நன்றாக வெந்ததும் உருளைக்கிழங்கை கரண்டியால் சின்ன சின்ன துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
- அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி!



Click it and Unblock the Notifications
