Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
மணமணக்கும்.. செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு கத்திரிக்காய் கார குழம்பு
Chettinad Style Potato Brinjal Kara Kuzhambu: ஒவ்வொரு நாளும் என்ன சமையல் செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் செட்டிநாடு ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுவார்களா?
உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு கத்திரிக்காய் கார குழம்பு செய்யுங்கள்.

இந்த கார குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு கத்திரிக்காய் கார குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு கத்திரிக்காய் கார குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைப்பதற்கு...
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* மல்லி விதை - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* துருவிய தேங்காய் - 1/4 கப்
குழம்பிற்கு...
* சின்ன வெங்காயம் - 1/2 கப்
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* கத்திரிக்காய் - 2 (நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
* புளிச்சாறு - 1 கப்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயம், மல்லி
விதை, சோம்பு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை
வறுக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு வதக்கி
இறக்க வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களை குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு 1/2
கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயம், பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்க
வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காயை சேர்த்து கிளறி,
புளிச்சாறு, சாம்பார் பவுடர், வெல்லம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கிளறி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூட்னதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் குக்கரில் உள்ள விசில் போதும், குக்கரைத் திறந்து, அதில்
அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து, 3-4
நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி, தாளித்ததை சேர்த்து கிளறினால்,
சுவையான செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு கத்திரிக்காய் கார குழம்பு
தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
