Latest Updates
-
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க!
செட்டிநாடு ஸ்டைல் காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை
உங்கள் வீட்டில் காபிஃப்ளவர் உள்ளதா? அதைக் கொண்டு மதிய வேளையில் சாதத்திற்கு சிம்பிளான,சுவையான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு ஸ்டைலில் காலிஃப்ளவர் ப்ரை செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் காபிஃப்ளவர் உள்ளதா? அதைக் கொண்டு மதிய வேளையில் சாதத்திற்கு சிம்பிளான, அதே சமயம் சுவையான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் காலிஃப்ளவர் கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் ப்ரை செய்து சாப்பிடுங்கள். இது சாம்பார் சாதத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, மிகவும் ருசியாகவும் இருக்கும். நீங்கள் செட்டிநாடு ஸ்டைல் பிரியர் என்றால், நிச்சயம் இதுவும் உங்களுக்கு பிடிக்கும்.

இப்போது செட்டிநாடு ஸ்டைல் காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை ரெசிபியின் எளிமையான செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து, உங்கள் அனுபவத்தை மறக்காமல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் - 3/4 கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
வறுத்து அரைப்பதற்கு...
* பட்டை - 1/4 இன்ச்
* கிராம்பு - 2
* மிளகு - 3/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மல்லி விதைகள் - 1 டீஸ்பூன்
* வர மிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு, நீரை ஊற்றி, அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து, 3 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின்பு நீரை வடிகட்டி விட்டு, அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியில் பாதியை சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் பூண்டு மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் ஊற வைத்துள்ள காலிஃப்ளவரைப் போட்டு 2 நிமிடம் வதக்கி, மீதமுள்ள அரைத்த மசாலா பொடியையும் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி விட்டு இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை ரெடி!



Click it and Unblock the Notifications











