Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
மணமணக்கும்... செட்டிநாடு பூண்டு குழம்பு
செட்டிநாடு ரெசிபிக்களை வீட்டில் செய்ய முயற்சிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இன்று ஒரு அற்புதமான செட்டிநாடு ரெசிபியைக் காண்போம். அது தான் செட்டிநாடு பூண்டு குழம்பு.
நீங்கள் செட்டிநாடு ரெசிபிக்களின் பிரியரா? செட்டிநாடு ரெசிபிக்களை வீட்டில் செய்ய முயற்சிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இன்று ஒரு அற்புதமான செட்டிநாடு ரெசிபியைக் காண்போம். அது தான் செட்டிநாடு பூண்டு குழம்பு. இந்த பூண்டு குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். நீங்கள் வழக்கமாக செய்யும் பூண்டு குழம்பு உங்களுக்கு பிடிக்காவிட்டால், செட்டிநாடு பூண்டு குழம்பை செய்யுங்கள். இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம். இந்த குழம்பில் மசாலாவை அரைத்து சேர்ப்பதால், இது தனித்துவமான சுவையைக் கொண்டுள்ளது.

உங்களுக்கு செட்டிநாடு பூண்டு குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பூண்டு குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 10
* பூண்டு - 20 பற்கள்
* தக்காளி - 1 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு...
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5-7
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வெங்தயம் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டின் தோலை உரித்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் புளியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதை கையால் பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள மல்லி, வரமிளகாய், கடலைப் பருப்பு, சீரகம், மிளகு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்து, மேலே எண்ணெய் மிதக்க ஆரம்பிக்கும் போது, சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான செட்டிநாடு பூண்டு குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
