Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
4 முட்டை இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு வையுங்க... சிக்கன், மட்டனை விட சூப்பரா இருக்கும்...!
Chettinad Muttai Kulambu Recipe in Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டிருக்கிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் முட்டை இருந்தால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் முட்டை கிரேவி செய்து கொடுங்கள். சிக்கன் அல்லது மட்டன் வாங்க முடியாத போது இந்த ஸ்டைலில் முட்டை கிரேவியை செய்தால் அவற்றை விட இதுவே பெட்டராக தோன்றும். இந்த முட்டை கிரேவியை செய்வது மிகவும் சுலபம். இதற்கு ஸ்பெஷலாக செட்டிநாடு மசாலாவை மட்டும் தனியாக தயார் செய்ய வேண்டும்.
இந்த கிரேவி சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி தோசை, புரோட்டா மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இந்த சூப்பரான முட்டைக் குழம்பை செய்வதற்கு ஸ்பெஷலான பொருட்கள் எதுவும் தேவையில்லை, ஆனால் அந்த பொருட்கள் நாம் எப்படி சேர்க்கிறோம் என்பதுதான் இந்த கிரேவியை ரொம்ப ஸ்பெஷலானதாக மாற்றுகிறது.

உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் முட்டைக் குழம்புஎப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- முட்டை - 4
- சின்ன வெங்காயம் - 15
- தக்காளி - 1
- மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- சீரகம் -1/4 ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிதளவு
- கருவேப்பிலை - சிறிதளவு
வறுத்து அரைக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- தனியா- 2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 3
- பூண்டு - 4 பல்
- இஞ்சி -சிறியது
- மிளகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
செய்முறை:
- முதலில் முட்டைகளை மூழ்கும் அளவு நீரில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து உரித்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேங்காய் தவிர வறுக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் மிதமான தீயில் வறுக்கவும்.
- பின்னர் வறுத்தெடுத்த பொருட்கள் ஆறியதும் தேங்காயுடன் சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, கருவேப்பிலை ,வெங்காயம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்றாக வதங்கியதும், வறுத்து அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.கொத்தமல்லி தூவி பரிமாறவும்.



Click it and Unblock the Notifications











