Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
கொத்தவரங்காயை வைச்சு செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு செய்யுங்க... ஒரு வாரம் வைச்சு சாப்பிடலாம்...!
Chettinad Kothavarangai Kara Kulambu Recipe in Tamil: தினமும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் முக்கியப் பிரச்சினையாகும். தினமும் ஒரே மாதிரியான சாம்பார், புளிக்குழம்பு செய்வது சாப்பிடுபவர்களுக்கு மட்டுமின்றி உங்களுக்கும் போரடிக்க தொடங்கியிருக்கும். அப்படியானால் ஒரு நாள் செட்டிநாடு ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். அதுவும் செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பை முயற்சி செய்து பாருங்கள்.
காரக்குழம்பு என்றால் பொதுவாக வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்றவற்றில்தான் செய்வார்கள். ஆனால் பலரும் சாப்பிடாத கொத்தவரங்காய் வைத்தும் சூப்பரான செட்டிநாடு கார குழம்பு செய்யலாம். கொத்தவரங்காயும், பூண்டும் சேர்ந்து செய்யும் இந்த செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் கொத்தவரங்காய் கார குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அதற்கான ரெசிபியை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- கொத்தவரங்காய் - 1/4 கிலோ
- புளிக்கரைசல் - 1 கப்
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 கப்
- பூண்டு - 15 பல்
- நறுக்கிய தக்காளி - 1
- வெல்லம் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மல்லித்தூள் - 2 ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- சீரகத்தூள் - 1 ஸ்பூன்
- வெந்தயம் - 1/2 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- உலர்ந்த மிளகாய் - 3
- கறிவேப்பிலை - சிறிளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- கொத்தவரங்காயைக் கழுவி சுத்தம் செய்து, நார்களை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கடுகு, பெருங்காயம், வெந்தயம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின்னர் பூண்டு சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
- இப்போது கொத்தவரங்காயை சேர்த்து பாதி வேகும் வரை வதக்கவும்.
- பின்னர் புளிக்கரைசல் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
- குழம்பு நன்கு கெட்டியானதும், அதில் சீரகத்தூளைச் சேர்த்து நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
- இதை சாதத்தில் ஊற்றி அப்பளத்துடன் சேர்த்து சாப்பிட அமிர்தம் போல இருக்கும். பரிமாறுவதற்கு முன் 1 ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி சாப்பிட்டால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.



Click it and Unblock the Notifications