Latest Updates
-
ஓசூரில் ஃபேக்ட்ரி வைத்த ராசி! தமிழர்கள் ஒவ்வொருத்தரும் பெருமைப்பட வேண்டிய தருணம்! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
Gold rate in chennai continues to decline for 4th consecutive day despite Iran war -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...!
கொத்தமல்லி சட்னியை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் ஒரு தடவை அரைச்சு பாருங்க..இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்!
Chettinad Kothamalli Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் காலை டிபனாக இருக்குமா? அதற்கு சைடு டிஷ்ஷாக எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் கொத்தமல்லி சற்று அதிகமாக உள்ளதா? அப்படியானால் அந்த கொத்தமல்லியை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் கொத்தமல்லி சட்னி செய்யுங்கள்.
இந்த செட்டிநாடு ஸ்டைல் கொத்தமல்லி சட்னி வழக்கமான கொத்தமல்லி சட்னி போல அல்லாமல் ஒரு சில பொருட்கள் கூடுதலாக சேர்த்து அரைக்கப்படுவதால் அதன் சுவை வித்தியாசமாகவும், வேற லெவலிலும் இருக்கும். இப்படி கொத்தமல்லி சட்னியை செய்யும் போது வழக்கமாக சாப்பிடுவதை விட வீட்டில் அனைவரும் அதிகமாக சாப்பிடுவார்கள். மேலும் இந்த சட்னி சத்தானதும் கூட. ஒருமுறை இப்படி சட்னியை செய்து கொடுத்தால் இனிமேல் இட்லி, தோசை என்றாலே இந்த சட்னியைத்தான் செய்வீர்கள்.

உங்களுக்கு செட்டிநாடு கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு கொத்தமல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 டீஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 3 பல் பூண்டு
- 1 இன்ச் இஞ்சி
- 1 டேபிள்ஸ்பூன் புதினா, நறுக்கியது
- 3 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி, நறுக்கியது
- 1 கப் துருவிய தேங்காய்
- 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
- சிறு துண்டு புளி
- 3 பச்சை மிளகாய்
- தேவையான அளவு உப்பு
- ½ கப் தண்ணீர்
தாளிக்க:
- 2 டீஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் கடுகு
- சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை:
- முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, 1 டீஸ்பூன் சீரகம், 3 பல் பூண்டு மற்றும் 1 இன்ச் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- பின்னர் 1 டேபிள் ஸ்பூன் புதினா, 3 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி சேர்த்து, இலைகள் சுருங்கும் வரை வதக்கவும்.
- இந்த கலவையை முழுமையாக ஆறவைத்து, ஒரு மிக்சி ஜாருக்கு மாற்றவும்.
- பின்னர் அதில் 1 கப் துருவிய தேங்காய், 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை, ஒரு சிறிய துண்டு புளி, 3 பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- இறுதியாக ½ கப் தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைக்கவும். தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- பின்னர் சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி தனியாக வைக்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, 1 டீஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் இந்த தாளிப்பை சட்னி மீது ஊற்றி நன்றாக கிளறினால் செட்டிநாடு கொத்தமல்லி சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications











