Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
மணமணக்கும்.. சுவையான... செட்டிநாடு கோலா உருண்டை குழம்பு
Chettinad Kola Urundai Kuzhambu: ஒவ்வொரு நாளும் சமைப்பதற்கு முன்பும் இன்று என்ன சமையல் செய்வதென்று யோசிப்போம். அப்படி யோசிக்கும் போது பலரது நினைவிலும் எப்போதும் சமைக்கும் சாம்பார், புளிக்குழம்பு தான் நினைவிற்கு வரும்.
ஆனால் நீங்கள் ஸ்பெஷலாக சமைக்க நினைத்தால், அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் செட்டிநாடு ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுவார்களானால், செட்டிநாடு கோலா உருண்டை குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு கோலா உருண்டை குழம்பு எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு கோலா உருண்டை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கோலா உருண்டை செய்வதற்கு..
* துவரம் பருப்பு - 1 கப்
* வரமிளகாய் - 4
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
* இஞ்சி - 1 இன்ச் (தோலுரித்து பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பிரியாணி இலை - 1
குழம்பிற்கு...
* தக்காளி - 5 (நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்)
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை கழுவி, நீரில் குறைந்தது 1 மணிநேரம் ஊற
வைக்க வேண்டும்.
* துவரம் பருப்பு ஊறியதும், மிக்சர் ஜாரில் துவரம் பருப்பு, பட்டை,
சோம்பு, வரமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கெட்டியாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த விழுதை ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, துருவிய
தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து, அதை சிறு உருண்டைகளாக
உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு இட்லி பாத்திரத்தில் அந்த உருண்டைகளை வைத்து 15 நிமிடம் வேக
வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சோம்பு, வெந்தயம், பிரியாணி இலை, பெருங்காயத் தூள்,
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து 1 நிமிடம் நிறம் மாறும் வரை
வதக்கியதும் தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் புளிச்சாற்றினை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள்
தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க
வைத்து, பின் குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான செட்டிநாடு கோலா உருண்டை குழம்பு தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications