Latest Updates
-
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
ராகு-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம்: இந்த 3 ராசிக்காரங்க சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போறாங்களாம் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடி ரெசிபி - இப்படி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
சன்டே ஸ்பெஷல் திருவனந்தபுரம் சிக்கன் ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026-ன் கடைசி சூரிய கிரகணத்தால் தீராத கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Perukku 2026: ஆடிப்பெருக்கு எப்போது? அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
பூமியின் அழிவு எப்போது வரப்போகிறது தெரியுமா? அதுவும் இப்படித்தான் நடக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
நாளை உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
இந்த 4 ராசிக்காரங்க அவங்கள பிடிச்சவங்களுக்காக உயிரையும் கொடுப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் சின்ன வெங்காய குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
Chettinad Kara Adai With Coconut Chutney Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது மாலை நேர உணவாக உற்பத்தி இட்லி, தோசைதான். சொல்லப்போனால் நம்மால் இட்லி, தோசை இல்லாமல் வாழவே முடியாது என்கிற நிலைக்கு நாம் வந்து விட்டோம். ஆனால் வாரம் முழுக்க இவற்றையே சாப்பிட முடியாதல்லவா? எனவே நேரமிருந்தால் இந்த செட்டிநாடு கார அடை-தேங்காய் சட்னி கம்போவை ட்ரை பண்ணி பாருங்க. டெஸ்ட் வேற லெவலில் இருக்கும்.
இந்த அடை சற்று காரசாரமாக இருப்பதோடு, மிகவும் ருசியானதும், சத்தானதும் கூட. இந்த அடைக்கு தேங்காய் சட்னி அட்டகாசமான சைடு டிஷ். ஒருமுறை இந்த அடையும், சட்னியும் செய்தால், வாரம் ஒருமுறை உங்கள் வீட்டில் தவறாமல் செய்வீர்கள். பல பருப்புகள் சேர்த்து அரைக்கப்படுவதால் இந்த அடை புரோட்டின் சத்து நிறைந்ததாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு கார அடை மற்றும் தேங்காய் சட்னி காம்போவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு கார அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அடை செய்ய தேவையான பொருட்கள்:
- 6 பூண்டு பல்
- 6 வர மிளகாய்
- 1 ஸ்பூன் சோம்பு
- 1 நெல்லிக்காய் அளவு புளி
- தண்ணீர் சிறிதளவு
- 1/4 கப் பச்சரிசி
- 1/4 கப் புழுங்கலரிசி
- 1/4 கப் கடலைப் பருப்பு
- 1/4 கப் துவரம் பருப்பு
- 2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 2 ஸ்பூன் பாசிப்பருப்பு
- தேவையான அளவு உப்பு
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
- ஒரு கைப்பிடி நறுக்கிய கொத்தமல்லி
- ஒரு கைப்பிடி நறுக்கிய கறிவேப்பிலை
தேங்காய் சட்னிக்கு தேவையான பொருட்கள்:
- துருவிய தேங்காய் - 1/2 மூடி
- வரமிளகாய் - 6
- பூண்டு - 4 சிறிய பல்
- உப்பு - தேவையான அளவு
- இஞ்சி - 1 இன்ச்
- கொத்தமல்லி - 2 ஸ்பூன்
- புளி - 1 இன்ச்
- பொட்டுக்கடலை - 4 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
அடை செய்முறை:
- ஒரு மிக்சி ஜாரில் பூண்டு பல், வர மிளகாய், சோம்பு, புளி மற்றும் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- பின் பசரிரி, புழுங்கலரிசி, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை நன்றாக கழுவி, இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
- அவை இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு, ஊறிய அதே தண்ணீரைச் சேர்த்தே மிக்ஸியில் போட்டு கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
- அதனுடன் அரைத்து வைத்துள்ள கார மசாலாவையும், தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
- மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இந்த மாவின் பதம், இட்லி மாவை விடச் சற்று அதிக கெட்டியாக இருக்க வேண்டும்.
- தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் நன்கு சூடாகும் வரை காயவிடவும். அரை கப் அளவு மாவை எடுத்து, தோசைக்கல்லின் மேல் ஊற்றிப் பரப்பவும்.
- அதன் மேல் 1/4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். ஒரு புறம் நன்கு வெந்ததும் அடையைத் திருப்பிப் போடவும். அடையின் இருபுறமும் பொன்னிறமாகும் வரை நன்கு வேகவிடவும்.
தேங்காய் சட்னி செய்முறை:
- முதலில் மிக்சர் ஜாரில் 1/2 மூடி துருவிய தேங்காயை சேர்த்து, அததுடன் வரமிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு 4 பல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு, பொட்டுக்கடலை சேர்த்து, மிகச்சிறிய அளவில் புளி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். அடையுடன் சாப்பிட இந்த சட்னி கெட்டியாக இருந்தால்தான் நன்றாக இருக்கும்.
- தேவைப்பட்டால் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னி மீது கொட்டி கிளறவும்.
- வழக்கமான இட்லி, தோசையை விட இந்த செட்டிநாடு கார அடையும், தேங்காய் சட்னியும் சூப்பரான காலை உணவாக இருக்கும்.



Click it and Unblock the Notifications