Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
ஈஸியான... செட்டிநாடு இறால் குழம்பு
பொதுவாக விடுமுறை நாட்களில் பிடித்த அசைவ உணவை சமைத்து சாப்பிடுவோம். நீங்கள் இறால் பிரியர் என்றால், இந்த வார விடுமுறையில் இறாலைக் கொண்டு செட்டிநாடு ஸ்டைல் குழம்பு செய்யுங்கள்.
பொதுவாக விடுமுறை நாட்களில் பிடித்த அசைவ உணவை சமைத்து சாப்பிடுவோம். நீங்கள் இறால் பிரியர் என்றால், இந்த வார விடுமுறையில் இறாலைக் கொண்டு செட்டிநாடு ஸ்டைல் குழம்பு செய்யுங்கள். இந்த செட்டிநாடு இறால் குழம்பு செய்வது மிகவும் சுலபம். மேலும் இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். நீங்கள் செட்டிநாடு ரெசிபி பிரியர் என்றால், இந்த வாரம் இதை முயற்சித்துப் பாருங்கள்.

உங்களுக்கு செட்டிநாடு இறால் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு இறால் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது)
வறுத்து அரைப்பதற்கு...
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2-3
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* ஓமம் - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* மிளகு - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 4
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
குழம்பிற்கு...
* எண்ணெய் - 1/4 கப்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கையளவு
* சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த பொடியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலா பொடிகளை சேர்த்து, அத்துடன் அரைத்த மசாலா பொடியையும் சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக கழுவிய இறாலை சேர்த்து கிளறி, குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு இறால் குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications